CPPCC NPC: பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் பெய்ஜிங்கில் நடைபெறும் ஆலோசனைக்கூட்டம்!

Latest China Economy Update : சீனாவில் பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் கூடும் முக்கியமான கூட்டங்களை நோக்கி சர்வதேச உலகம் கூர்மையாக கவனிக்கும் நிலையில், செய்தியாளர் சந்திப்பு தவிர்க்கப்பட்டுள்ளது பல கேள்விகளை எழுப்புகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 4, 2024, 03:22 PM IST
  • சீனாவின் முக்கியமான இரண்டு கூட்டங்கள்
  • பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் கூடும் உயர்மட்ட கூட்டம்
  • பெய்ஜிங்கில் மார்ச் 4 முதல் 11 வரை பரபரப்பான கூட்டங்கள் நடைபெறும்
CPPCC NPC: பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் பெய்ஜிங்கில் நடைபெறும் ஆலோசனைக்கூட்டம்! title=

Xi Jinping Economy : சீன அரசாங்கம் அதன் சிக்கலான பொருளாதாரத்திற்கு தீர்வுகளை கொண்டு வரும் மிகப் பெரிய பிரச்சனையை எதிர்கொள்கிறது. சீனாவில் மக்கள் தேசிய மக்கள் காங்கிரஸை (National People's Congress) நாளை தொடங்கும் போது என்ன நடக்கும் என்று உலகமே உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இன்று (மார்ச் 4) தொடங்கும் சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாடு (CPPCC) மற்றும் மார்ச் 5 ஆம் தேதி தொடங்கும் தேசிய மக்கள் காங்கிரஸ் (NPC) ஆகியவற்றின் வருடாந்திர கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன.  

பெய்ஜிங்கின் கேவர்னஸ் கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பில் ஆண்டுதோறும் 3,000 பிரதிநிதிகள் கூடி, முக்கியமான விஷயங்களை விவாதிப்பார்கள். இந்த ஆண்டும் வழக்கம் போல கூடும் இந்த கூட்டமானது, சட்டம் இயற்றுவது, பணியாளர்களை மாற்றியதை அங்கீகரிப்பது போன்ற விஷயங்கள் தொடர்பாக ஆலோசிக்கும். ஆனால், இந்த ஆண்டு, வழக்கத்திற்கு மாறாக, கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறாது என்று செய்தி வெளியானது அதிர்ச்சியளிக்கிறது.

பொதுவாக இந்தக் கூட்டமானது மூடிய கதவுகளுக்குப் பின்னால் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் அரசியல் நடவடிக்கைகளாகவே இருக்கும்.  ஆனால், சீனா எதிர்கொள்ளும் நெருக்கடிகளில் முக்கியமானதாக தற்போது ரியல் எஸ்டேட் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வேலையில்லா பட்டதாரிகளின் வேலையின்மை, கடன் சுமை என நாடு தள்ளாடும் நிலையில், சீனத் தலைவர் ஜி ஜின்பிங் மற்றும் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரிகளும் அந்நாட்டின் பொருளாதார பிரச்சனைகளை விவாதிக்கின்றனர்.

மேலும் படிக்க | கடத்தப்பட்ட பெண் 7 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

சொத்துத் துறை நெருக்கடி, அரசாங்கக் கடன், பணமதிப்பிழப்பு, பங்குச் சந்தை வீழ்ச்சி மற்றும் அமெரிக்காவுடனான பிரச்சனை என தடுமாறும் சீனாவின் பொருளாதாரம் இந்த விவாதங்களில் முக்கிய இடம் பெறும். அதிகாரபூர்வமான இந்த அரசியல் கூட்டம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. உலகின் பெரும் பொருளாதார சக்தியாக மாற விரும்பும் சீனாவின் இலக்கில் தற்போது பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  

பொருளாதார பிரச்சனை மற்றும் பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில், ஷி  ஜின்பிங் பொருளாதார ஆய்வை மேற்கொள்வார். கடந்த ஆண்டு நாடு சந்தித்த பொருளாதாரப் போராட்டங்கள், வேலைவாய்ப்பில் நிச்சயமற்ற தன்மை, சிறு வணிகம் என சவால்களால் நிறைந்த நிலையில் சீன அதிபர் மூன்றாவது பதவிக்காலத்தை தொடங்கினார். 

இந்த ஆண்டு 2024 ஆம் ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி இலக்கு 5 சதவிகிதமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பிறப்பு விகிதங்கள் குறைவதால் ஏற்படும் பிரச்சனை முதல் தொழில்நுட்ப ஒழுங்குமுறை வரை அழுத்தமான சிக்கல்களை தீர்க்கும்.

பொருளாதார அளவில் உலகளாவிய தாக்கம் மற்றும் அரசியல் தாக்கங்களும் சீனாவின் பொருளாதார சிக்கல்களுக்குக் காரணமாகிறது. பொருளாதாரப் பிரச்சினைகளைக் கையாள்வதில் அரசின் திறனை எப்படி மேம்படுத்துவது என்பதையும் இந்த பொருளாதார ஆய்வு மேம்படுத்தும்.  

மேலும் படிக்க | அபுதாபி இந்து கோவிலில் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி.. ஆனால் சில விதிமுறைகள் உண்டு

பொருளாதார வளர்ச்சி இலக்குகள் மற்றும் இராணுவ செலவுகள் உட்பட உத்திகள் மற்றும் முக்கிய விஷயங்களில் பிரச்சனை இருக்கும் நிலையில் சீனாவின் பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகள் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பது தற்போது சீனா எதிர்கொள்ளும் சவாலாக இருக்கிறது.  

பொருளாதாரம் தொடர்பான விவாதங்கள், அரசுக் கட்டுப்பாடுகள், சமூக ஊடக கட்டுப்பாடுகள் உட்பட, அரசு தொடர்பான விஷயங்களைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. சீன அதிபரின் புதிய நிர்வாகம் எதிர்கொள்ளும் சவால்க:ளால், அந்நாடு உலகப் பொருளாதாரத்தில் எதிர்கொள்ளும் தாக்கம் தொடர்பான சந்தேகங்களை எழுப்புகிறது.

தைவான் தொடர்பான சீனாவின் நிலைப்பாடு, அமெரிக்காவுடனான உறவுகள், தொழில்நுட்ப ஏற்றுமதி கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் புதுமைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து இந்த அமர்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டும். நாட்டின் பொருளாதாரம் தொடர்பான இணக்கமான நிலைப்பாட்டை நோக்கிய நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

சீனாவில் வெளிவிவகார அமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என நாட்டின் உயரதிகாரிகள் எதிர்பாராத விதமாக நீக்கப்பட்டது நாட்டின் மீதான அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இந்த சூழ்நிலையில், சீனாவின் புதிய வெளியுறவு அமைச்சர் நியமனம் ஆகியவை முக்கியத்துவம் பெறுகிறது. சீனாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்படும் மாற்றங்கள் சர்வதேச அளவில் மற்றங்களை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க | குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்... குடியை நிறுத்தங்கள் - புதின் சொல்லும் அட்வைஸ் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News