திவாலாகிவிட்டதாக அறிவித்த கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் எஃப்டிஎக்ஸ், சுமார் 415 மில்லியன் டாலர் கிரிப்டோகரன்சி ஹேக் செய்யப்பட்டு திருடப்பட்டதாகக் கூறியுள்ளது. கிரிப்டோ, ரொக்கம் மற்றும் பத்திரங்களில் $5 பில்லியனுக்கும் அதிகமான தொகையை மீட்டெடுத்தாலும், அதன் சர்வதேச மற்றும் அமெரிக்க கிரிப்டோ பரிமாற்றங்களில் குறிப்பிடத்தக்க குறைபாடுகள் இன்னும் உள்ளன என்று எஃப்.டி.எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கு காரணம் ஹேக் செய்யப்பட்டது தான் என்று குற்றம் சாட்டுகிறது FTX. கிரிப்டோவில் $323 மில்லியன் அளவிலான தொகை, FTX இன் சர்வதேச பரிமாற்றத்திலிருந்து ஹேக் செய்யப்பட்டதாகவும், நவம்பர் 11 அன்று திவால்நிலைக்கு தாக்கல் செய்ததில் இருந்து $90 மில்லியன் அமெரிக்க பரிமாற்றத்திலிருந்தும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது ஒருபுறம் என்றால், FTX நிறுவனத்தின் நிறுவனர் சாம் பேங்க்மேன்-ஃப்ரைட் (Bankman-Fried) வெளியிட்ட ஒரு வலைப்பதிவு இடுகையில், நிறுவனத்தின் அறிக்கையின் சில பகுதிகள் தொடர்பாக கேள்வி எழுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சல்லிவன் & க்ரோம்வெல்லில் உள்ள FTX நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் நிறுவனத்தின் நிதி குறித்த "மிகவும் தவறாக வழிநடத்தும்" படத்தை முன்வைத்ததாகவும், அமெரிக்க வாடிக்கையாளர்களுக்குத் திருப்பிச் செலுத்துவதற்கு நிறுவனத்திடம் போதுமான பணம் இருப்பதாகவும் எழுதினார்.
நவம்பரில் FTX சி.இ.ஓ பதவியில் இருந்து விலகிய சாம் பேங்க்மேன்-ஃப்ரைட், வாடிக்கையாளர்கள் $181 மில்லியன் முதல் $497 மில்லியன் வரை கடன்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | அன்லிமிடெட் ஆ பேசனுமா? ரூ 179 ரீசார்ஜ் பிளான்..அள்ளி வீசும் ஏர்டெல்
தனது கிரிப்டோ-ஃபோகஸ்டு ஹெட்ஜ் நிதியான அலமேடா ரிசர்ச் மூலம் பெற்ற கடன்களை செலுத்துவதற்காக FTX வாடிக்கையாளர்களிடமிருந்து பில்லியன் கணக்கான டாலர்களை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் தொடர்பாக, சல்லிவன் மற்றும் குரோம்வெல் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். நிறுவனத்தின் திவால் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட ஃபிரைட்டின் முயற்சிகள் நிறுவனத்தால் நிராகரிக்கப்பட்டதாக, FTX நிறுவனத்தின் வழக்கறிஞர்களால் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | Budget 2023: பட்ஜெட்டில் நுகர்வு செலவினங்களுக்கான வரி தள்ளுபடி பலன்கள் எவ்வளவு?
FTX மேலும் ரொக்கமாக $1.7 பில்லியன், $3.5 பில்லியன் அளவிலான ரொக்க கிரிப்டோகரன்சி மற்றும் $300 மில்லியன் பத்திரங்களை மீட்டெடுத்துள்ளதாகத் தெரிவித்தது.
"மீட்புகளை அதிகரிப்பதற்கான எங்கள் முயற்சிகளில் நாங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறோம், மேலும் இந்த ஆரம்ப தகவலை வெளிக்கொணர எங்கள் குழுவின் தீவிர விசாரணை முயற்சியை எடுத்துள்ளது" என்று நிறுவனத்தின் வழக்கறிஞரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜான் ரே ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
நவம்பர் 11, 2022 அன்று கிரிப்டோ விலைகளின் அடிப்படையில், இன்றுவரை மீட்கப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் $685 மில்லியன் சோலனா, $529 மில்லியன் FTX இன் தனியுரிம FTT டோக்கன் மற்றும் $268 மில்லியன் பிட்காயின் ஆகியவை அடங்கும்.
ஒரு காலத்தில் 26 பில்லியன் டாலர் சொத்து மதிப்பைக் கொண்டிருந்த சாம் பேங்க்மேன்-ஃப்ரைட், FTX நிறுவனம் திவாலான பிறகு, அவரும் திவாலாகிவிட்டார்.
கிரிப்டோ பரிமாற்ற தளத்தைக் காப்பாற்ற போதுமான நிதி திரட்ட முடியாத நிலையில் ஒரே நாளில் சாம் பேங்க்மேன்-ஃப்ரைட் சொத்து மதிப்பு 15.6 பில்லியன் டாலரில் இருந்து 1 பில்லியனாகக் குறைந்தது.
மேலும் படிக்க | Flipkart Offer: பாதிக்கும் குறைவான விலையில் பிரீமியம் சாம்சங் போன், முந்துங்கள்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ