கனடாவில் உள்ள ஆல்பர்ட்டா, சஸ்காட்செவன் ஆகிய மாகாணங்களில் மான்கள், கலை மான்கள், கடமான்கள் உள்ளிட்ட மான் வகைகள் இடையே வித்தியாசமான நோய் பரவி வருவதாக அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு எவ்வித சிகிச்சையோ, தடுப்பூசியோ இல்லை என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக இந்த தொற்று 1960-களில் அமெரிக்காவில் கண்டறியப்பட்டது. கொலராடோ, கன்சாஸ், மின்னிசோட்டா உள்ளிட்ட 26 மாகாணங்களில் இந்த தொற்றுநோயின் தாக்கம் இருந்தது. கடந்த 1996-ம் ஆண்டு கனடாவில் முதன்முதலாக சஸ்காட்செவனில் உள்ள மான் பண்ணையில் இந்த தொற்று பரவியது.
மேலும் படிக்க | Loudest Cities: உலகின் அதிக சப்தமான நகரங்கள்! ஒலி மாசு தத்தெடுத்துக் கொண்ட ஊர்கள்
இந்த நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகள் அதன் மூளையின் கட்டுப்பாட்டை இழந்து விடுவதோடு, அதிக உமிழ்நீர் சுரப்பு, அசாதாரண நடத்தை, எடை இழப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படும் என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அறிகுறிகளினால், இந்நோய் 'ஜாம்பி நோய்' என குறிப்பிடப்படுகிறது. இந்த வைரசால் பாதிக்கப்பட்ட விலங்களின் இறைச்சியை உண்பதாலும், பாதுகாப்பற்ற முறையில் கையாள்வதாலும், மனிதர்களுக்கும் இந்த தொற்று பரவலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் முடிந்தவரை இறைச்சியை பாதுகாப்பாக கையாளுமாறும், ரப்பர் கையுறைகளை பயன்படுத்துமாறும் சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR