அமெரிக்க அதிபராக பதிவி ஏற்றதில் இருந்து பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார் டோனால்ட் டிரம்ப். அதில் ஓர் அதிரடி உத்தரவு தான் அமெரிக்காவில் அத்துமீறி குடியேறி உள்ள வெளிநாட்டினரை அந்நாட்டை விட்டு வெளியேற்ற உத்தரவிட்டது.
இதில் 104 இந்தியர்கள் நேற்று அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்கள். இவர்கள் அமெரிக்காவின் இராணுவ விமானம் மூலம் குஜராத்தில் விடப்பட்டனர். தற்போது அவர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இந்த 104 பேரில் பலர் முகவர்களால் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். அதை குறித்தே இச்செய்து தொகுப்பு விவரிக்கிறது.
ரூ.42 லட்சம் கொடுத்து ஏமாற்றம்
இந்தியாவை வந்து சேர்ந்த 104 பேரில் முகவர்களால் ஏமாற்றம் அடைந்தது குறித்து தெரிவித்துள்ளார். ஹர்விந்தர் சிங் பஞ்சாப் மாநிலம் தாளி எனும் கிராமத்தை சேர்ந்தவர். இவர் அமெரிக்காவிற்கு செல்வதற்காக ரூ.42 லட்சம் முகவரிடம் கொடுத்துள்ளார். அவருக்கு வேலை விசா கிடைக்கும் என முகவரால் நம்ப வைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் விசா கிடைக்கவில்லை. முதற்கட்டமாக இவர் டெல்லியில் இருந்து கத்தார் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து பிரேசில் சென்றுள்ளார்.
மேலும் படிங்க: இந்தியர்களை நாடு கடத்தும் டிரம்ப்! வெளியான தகவல்
பிரேசிலில் பெருவில் இருந்து ஒர் விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அழைத்து செல்வதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அத்தகைய விமானம் இல்லை. மாறாக டாக்ஸி மூலம் கொலம்பியாவிற்கும் பனாமாவிற்கும் அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். பின்னர் அங்கிருந்து ஒரு கப்பலில் ஏற்றி செல்வதாக கூறியுள்ளனர். ஆனால் அங்கு அப்படி எந்த ஒரு கப்பலும் இல்லை.
இரண்டு நாட்கள் நடைப்பயணம்
இதனால் வெறும் காலில் நடக்க தொடங்கி உள்ளார். இங்கிருந்து அமெரிக்காவுக்கு செல்லும் வழி கழுதை பாதை என்று அழைக்கப்படுகிறது. ஹர்விந்தர் சிங் இங்கிருந்து இரண்டு நாட்கள் நடந்து சென்றார். இதில் இவருடன் வந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பின்னர் இவர்கள் ஓர் சிறிய படகு மூலம் மெக்சிகோ நோக்கி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த பயணத்தின் போது படகும் கழிந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. இதில் இவருடன் வந்த மற்றொருவரும் உயிரிழந்தார். இப்படி இவரது பயணம் முடிவடைந்தது. இறுதியில் மெக்சிகோவில் வைத்து இவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவரை போல பலரும் முகவர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஹர்விந்தர் சிங் மனைவி கூறியதாவது, எங்களிடம் இருந்ததை விற்று, அதிக வட்டிக்கு கடன் வாங்கி முகரிடம் கொடுத்தோம். ஆனால் முகவர் எங்களை ஏமாற்றிவிட்டார். தற்போது எனது கணவர் நாடு கடத்தப்பட்டது மட்டுமல்லாமல் நாங்கள் மிகப்பெரிய கடனின் சிக்கி உள்ளோம் என மிகுந்த வருத்ததுடன் தெரிவித்தார்.
வழி நெடுக பிணங்கள்
ஹர்விந்தர் சிங்கை போலவே சுக்பால் சிங் மற்றொருவரும் தான் ஏமாற்றம் அடைந்தது குறித்து தெரிவித்துள்ளார். இவர் கடல் வழியாக சுமார் 15 மணி நேரம் பயணம் செய்து, பள்ளத்தாக்குகளால் சூழப்பட்ட மலைகள் வழியாக சுமார் 40-45 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றுள்ளார்.
இந்த பயணத்தில் யாராவது காயம் அடைந்தால் அவர்கள் பாதி வழியிலேயே கைவிடப்படுவர். இப்படி கைவிடப்பட்டு இறந்துபோனவர்களை வழி நெடுக பார்க்க முடிந்ததாக சுக்பால் தெரிவித்தார். மேலும், இப்படிபட்ட கொடூரங்கள் யாருக்கு நடக்கக்கூடாது என்றும், தவரான வழியில் யாரும் அமெரிக்காவுக்கு செல்ல வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் படிங்க: சர்வதேச நிதியை நிறுத்திய டிரம்ப்.. இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ