45வது அதிபரான டொனால்டு டிரம்ப் வெற்றி உரை

அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவி ஏற்க உள்ளார். டியரசு அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்வானார். பல்வேறு கருத்துக்கணிப்புகளை முறியடித்து குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று உள்ளார்.

Last Updated : Nov 9, 2016, 02:19 PM IST
45வது அதிபரான டொனால்டு டிரம்ப் வெற்றி உரை title=

அமெரிக்கா: அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவி ஏற்க உள்ளார். டியரசு அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்வானார். பல்வேறு கருத்துக்கணிப்புகளை முறியடித்து குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று உள்ளார்.

சற்று முன்னர் வெளியான தகவல் படி குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் 288(47.9%) இடங்களிலும், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் 215(47.%) இடங்களிலும் வாக்குகள் பெற்றுள்ளனர். 288 இடங்களிலும் வெற்றி பெற்று அதிபராக தேர்வானார் டொனால்ட் டிரம்ப்.

உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்றுது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன், குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் ஆகியோர் போட்டியிட்டனர். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. டிரம்ப் அதிக தொகுகளில் முன்னிலை பெற்றார். குறிப்பாக வெற்றியை நிர்ணயிக்கும் பெரிய மாகாணங்களான அதிக ஓட்டுகள் கொண்ட டெக்சாஸ், புளோரிடாவை கைப்பற்றினார். ஜனநாய கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் அதிக ஓட்டுகள் கொண்ட கலிபோர்னியாவை கைப்பற்றினார். 

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியான டொனால்ட் டிரம்புக்கு பல தலைவர்கள் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றன.

அபார வெற்றி பெற்ற டொனல்டு டிரம்ப் தற்போது உரையாற்றி வருகிறார். அவர் கூறியதாவது:-  அமெரிக்கர்கள் அனைவருக்கும் அதிபராகச் செயல்படுவேன் என்று அவர் உறுதி அளித்தார். இது ஒரே மக்களாக நாம் ஒன்றினைந்து செயல்பட வேண்டிய நேரம் என்றார். மேலும் நமது நட்பு நாடுகளுடனான உறவு மேலும் வலுப்படுத்தப்படும் எனவும் கூறினார்.

Trending News