Video - தைவான் நிலநடுக்கம்; பொம்மை போல் குழுங்கிய ரயில் - சுனாமி எச்சரிக்கை

தைவானில் இன்று ஏற்றப்பட்ட நிலநடுக்கத்தால் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ரயில் கடுமையாக குழுங்கும் வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Sep 18, 2022, 04:47 PM IST
  • தைவானில் இன்று 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • தைவானில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகியிருந்தது.
  • தைவான் அருகே உள்ள தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுப்பு.
Video - தைவான் நிலநடுக்கம்; பொம்மை போல் குழுங்கிய ரயில் -  சுனாமி எச்சரிக்கை title=

தைவான் நாட்டின் தென்கிழக்கு கடலோர பகுதியில், 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், முதலில் 7.2 அளவில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், பின்னர் 6.9 அளவாக குறைந்ததாக ஆய்வு மையம் கூறியுள்ளது.

அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டபோது, ரயில் நிலையம் ஒன்றில் நின்றுகொண்டிருந்த, பொம்மை ரயில் போன்று குழுங்கிய வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது. அந்த ரயில் குழுங்குவதை பார்க்கும்போது, அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் எப்படி இருந்திருக்கும் என்பதை உணர முடிவதாக பலரும் பதிவிட்டு வருகின்றனர். 

மேலும் படிக்க | பிரிட்டனின் ஓரின சேர்க்கை ‘தந்தையர்களுக்கு’ வாடகை தாய் மூலம் குழந்தை!

நிலநடுக்கம் பிற்பகல் 2:44 மணிக்கு டைடுங்கிற்கு வடக்கே 50 கி.மீ., தொலைவிலும், 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால், யூலி நகரில் உள்ள ஒரு கிராமத்தின் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது. புஜியன், குவாங்டாங், ஜியாங்சு மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்துள்ளது.

தைவான் அருகே உள்ள தீவுகளுக்கு ஜப்பான் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது. அலைகள் 1 மீட்டர் உயரத்திற்கு எழ வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. தைவானின் இதே பகுதிகளில், நேற்றும் நிலநடுக்கம் உணரப்பட்டது. 6.6 ரிக்டர் அளவிற்கு ஏற்பட்ட நேற்றைய நிலநிடுக்கத்தால், சிறு பாதிப்புகள் மட்டுமே ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தைவானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். தைவானின் மிக மோசமான நிலநடுக்கம் என்றால், அது 1999ஆம் ஆண்டு செப்டம்பரில் ஏற்பட்டதாகும்.அதில், 7.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கத்தால், 2 ஆயிரத்து 400 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | நாசாவின் Artemis 1 திட்டம் 3வது முறையாக ஒத்திவைப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News