விமானம் மூலம் பிட்சா உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாடிக்கையாளர்களின் வீடுகளில் கொண்டு சேர்க்கும் நவீன தொழில்நுட்பம் ரீதியில் தொடங்கப்பட்டுள்ளது!
சீனா: ஷாங்காயில் உள்ள ஜின்ஷனா் தொழிற்பூங்கா பகுதியில் உள்ள அலி.மீ என்ற ஆன்லைன் உணவு விற்பனை நிறுவனம் ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் உணவு பொருட்களை டோர் டெலிவரி செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து அலி.மீ நிறுவனத்தின் தலைவர் லாங்ஜியா தெரிவித்துள்ளது; ‘வாகனங்களை விட, ஆளில்லா விமானம் மூலம் உணவுப் பொருட்களை கொண்டு செல்வதால், பெருமளவில் நேரம் மிச்சமாகிறது. இதனால் மேன்பவர் குறைவதோடு, எரிபொருள் சேவையும் குறையும். வருங்காலங்களில் 70% அளவுக்கு இதன் பயன்பாடு அதிகரிக்கும். உணவு பொருட்களை கொண்டு சேர்க்கும் இந்த ட்ரோன்கள் 70 மீட்டர் உயரம் வரை பறக்கும் திறன் கொண்டது. சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை இவை செல்லும் திறன் கொண்டவை’ என தெரிவித்துள்ளார்.
முன்னதாக இது போன்று உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஐஐடி மாணவர்கள் உணவு டெலிவரி செய்யும் ‘டெக் இகிள்’ என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இதன் மூலம் ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவினை ஆளில்லாத ட்ரோன்கள் உரிய இடத்தில் கொண்டு போய் சேர்க்ககும் என்பது குறிப்பிடதக்கது. உபேர் நிறுவனமும் ட்ரோன் மூலம் உணவை விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளது. புதிய ஆப் மூலம் தேவைப்படும் உணவு குறித்து ஒரு பொத்தானை அழுத்தினாலே 30 நிமிடத்திற்குள் உணவுப் பொருள் வீட்டுக்கு வந்து விடும்.