இந்தியா வல்லரசு கனவு காண்கிறது... ஆனால் நாம் யாசிக்கிறோம்... பாக் எதிர்கட்சித் தலைவர்

பாகிஸ்தானில், எதிர்கட்சியான ஜமியத் உலமா-இ-இஸ்லாம் JUI-F தலைவர் மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், பாகிஸ்தானும் இந்தியாவும் இணைந்து சுதந்திரம் அடைந்த நிலையில், பாகிஸ்தான் திவாலாகும் நிலையில் உள்ளது என்றும், ஆனால் இந்தியா இப்போது வல்லரசாக முயற்சிக்கிறது எனக் கூறியுள்ளார். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 30, 2024, 07:04 PM IST
இந்தியா வல்லரசு கனவு காண்கிறது... ஆனால் நாம் யாசிக்கிறோம்... பாக் எதிர்கட்சித் தலைவர் title=

பாகிஸ்தானில்,  எதிர்கட்சியான ஜமியத் உலமா-இ-இஸ்லாம் JUI-F தலைவர் மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், பாகிஸ்தானும் இந்தியாவும் இணைந்து சுதந்திரம் அடைந்த நிலையில், பாகிஸ்தான் திவாலாகும் நிலையில் உள்ளது என்றும், ஆனால் இந்தியா இப்போது வல்லரசாக முயற்சிக்கிறது எனக் கூறியுள்ளார். பாகிஸ்தான் நாடு கடந்த சில ஆண்டுகளாக விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி, அரசியல் குழப்பங்கள் ஆகியவற்றால் பாதிப்படைந்து உள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் பேசியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

JUI-F தலைவர் மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மான், தனது நாடாளுமன்ற உரையில், ‘இந்தியாவையும் நம்மையும் ஒப்பிட்டுப் பாருங்கள்... 1947 ஆகஸ்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே சமயத்தில் சுதந்திரமடைந்தன. இன்று இந்தியாவை காணுங்கள்... வல்லரசாக மாற வேண்டும் என்று அவர்கள் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். ஆனால், நாம்  திவால் ஆவதைத் தவிர்ப்பதற்காக யாசகம் செய்துகொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் யார் பொறுப்பு...’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையி, ‘சில சக்திகள் நாடாளுமன்றத்திற்கு வெளியில் இருந்து நம்மைக் கட்டுப்படுத்துகின்றன. அவர்கள் தான் முடிவுகளை எடுக்கிறார்கள். நாம் பொம்மைகளாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறோம். நாடாளுமன்றத்தில் அரசு அமைந்தாலும்,  யார் பிரதமர் என்பதை அதிகாரத்துவத்தினர் தீர்மானிக்கிறார்கள். எவ்வளவு காலம் தான், நாட்டின் நலனை நாம் சமரசம் செய்துகொண்டிருப்பது... நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இன்னும் எத்தனை காலத்துக்கு வெளி சக்திகளின் உதவியை நாடிக்கொண்டிருப்பது’ என்று காட்டமாக பேசினார்.

மேலும் படிக்க | பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள்... போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்!

பாகிஸ்தானில் கடந்த 2022 ஏப்ரலில் அப்போதைய பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான ஆட்சியை, பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வந்து ஆட்சியை கவிழ்த்தன. அதைத் தொடர்ந்து ஷெபாஸ் ஷெரீப் பிரதமரானார். அதன் பின்னர், பல்வேறு வழக்குகளின் கீழ் இம்ரான் கான், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியும் பெரும்பான்மையைப் பெறவில்லை. பாகிஸ்தானில் நடந்த தேர்தலில், ஆச்சரியம் அளிக்கும் விதமாக, இம்ரான் கானின் ஆதரவாளர்கள், ராணுவத்தின் அடக்கு முறையையும் மீறி சுயேச்சையாக போட்டியிட்டு பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றதை எடுத்து, அங்கே சுமார் மூன்று வார காலங்களுக்கு அரசியல் குழப்பம் நீடித்தது.  எனினும், பின்னர், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி ஷெபாஸ் ஷெரீப் தலைமையில், பாகிஸ்தான் மக்கள் கட்சியுடன்  இணைந்து ஆட்சியமைத்தது. கிஸ்தான் நாட்டின் பிரதமராக, ஷெபாஸ் ஷெரீப் 2வது முறையாக, மார்ச் மாத தொடக்கத்தில் மீண்டும் பதவி ஏற்றுக் கொண்டார்.

மேலும் படிக்க | பொய் சொன்னவருக்கு 80 கசையடி... பாகிஸ்தான் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News