துபாயில் ஓட்டுநராக பணிபுரியும் இந்தியரான அஜய் ஓகுலா, இந்திய மதிப்பில் ரூ. 33 கோடி மதிப்பிலான லாட்டரியில் பரிசாக கிடைத்துள்ளது. லாட்டரி பரிசை வென்ற பிறகு ஓகுலா, "எனக்கு ஜாக்பாட் அடித்ததை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை" என்றார்.
தென்னிந்தியாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஓகுலா, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணிபுரிய வந்தார். தற்போது ஒரு நகைக்கடை நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
"இந்தத் தொகையில் எனது தொண்டு அறக்கட்டளையை தொடங்குவேன். இது எனது சொந்த ஊர் மற்றும் அண்டை கிராமங்களில் உள்ள அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய பயன்படுத்த உள்ளேன்" என்று ஓகுலா கூறினார்.
மேலும் படிக்க | கொரோனாவுக்கு நடுவே சீனாவில் உதட்டு முத்த ட்ரெண்டிங்..! இதெல்லாம் தேவையா பாஸ்?
அவர் லாட்டரி அடித்து கோடீஸ்வரரானார் என்ற செய்தியை இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தினருக்கு தெரிவித்தபோது, அவரது தாயும் உடன்பிறப்புகளும் முதலில் நம்பவில்லை என்று ஓகுலா தெரிவித்தார். இதுகுறித்து கூறுகையில்,"தற்போது என்னை பற்றி நிறைய செய்திகள் வருவதால், அவர்கள் இனிமேல் நம்பித்தான் ஆக வேண்டும்" என்றார்.
அதே லாட்டரியில், 50 வயதான இங்கிலாந்தைச் சேர்ந்த பாவ்லா ரீச் என்பவர் ரூ.15,83,749 வென்றார். மூன்று குழந்தைகளின் தாயான இவர் சுமார் 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மனித வள நிபுணராக பணியாற்றி வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | COVID Horror: விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா அலை! புத்தாண்டை பதம் பார்க்கும் கோவிட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ