நேபாள வளர்ச்சிக்கு இந்தியா உறுதுணை: சுஷ்மா சுவராஜ்!!

நேபாளம் நாட்டின் அரசியலில் நிரந்தரத்தன்மை உருவாக இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும் என வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உறுதியளித்துள்ளார். 

Last Updated : Feb 2, 2018, 04:00 PM IST
நேபாள வளர்ச்சிக்கு இந்தியா உறுதுணை: சுஷ்மா சுவராஜ்!! title=

நேபாளம் நாட்டின் அரசியலில் நிரந்தரத்தன்மை உருவாக இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும் என வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உறுதியளித்துள்ளார்.

இருநாள் பயணமாக இந்திய வெளியுறத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அரசு முறை பயணமாக நேபாளத்தலைநகர் காத்மண்டிற்கு சென்றார். காத்மாண்டு நகரில் உள்ள சோல்ட்டீ கிரவுன் பிளாஸா ஓட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது சுஷ்மாவுக்கு பிரச்சந்தா விருந்தளித்து கவுரவித்தார்.

அங்கு கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக காட்கா பிரசாத் ஒலி, அதிபர் பித்யா தேவி பந்தாரி மற்றும் பிரதமர் ஷேர் பஹதூர் தியூபா ஆகியோரை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து,  பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்ற இடதுசாரி கூட்டணிக்கு சுஷ்மா வாழ்த்து தெரிவித்ததுடன்,

இரு நாடுகளுக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருந்தது என்றார்.

இது தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக காட்கா பிரசாத் செய்தியாளர்களுக்கு கூறுகையில்;- நேபாளத்தின் வளர்ச்சி மற்றும் அரசியல் நிரந்தரத்தன்மை உருவாக அண்டைநாடுகளின் ஒத்துழைப்பு தேவைப்படுவதாக நான் சுஷ்மா சுவராஜிடம் தெரிவித்தேன். நேபாளத்தின் வளர்ச்சி மற்றும் அரசியல் நிரந்தரத்தன்மைக்கு இந்தியா முழுமையான ஒத்துழைப்பை அளிக்கும் என சுஷ்மா உறுதியளித்துள்ளார் எனவும் குறிப்பிட்டார்.

இன்று டெல்லி புறப்படுவதற்கு முன்னதாக நேபாள பிரதமர் ஷேர் பகதூர் டியுபா மற்றும் நேபாளத்தின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்க சுஷ்மா சுவராஜ் திட்டமிட்டுள்ளார். 

Trending News