சன் கிளாஸ்-ஐ ஆட்டைய போட்ட அரசியல்வாதி! சிசிடிவியால் பறிபோன எம்.பி. பதவி..

அரசியல் கட்சி தலைவரும் நாடாளுமன்ற எம்பி யுமான ஒருவர் சூப்பர் மார்க்கெட்டில் ஒரு பொருளைத் திருடியதால்  மாட்டிக் கொண்டுள்ளார் 

Written by - Ezhilarasi Palanikumar | Last Updated : Jul 28, 2023, 10:17 PM IST
  • நார்வே நாட்டை சேர்ந்தவர் 41 வயதான பிஜோர்னர் மோக்ஸ்னெஸ்.
  • இவர் நார்வேஸ் ரெட் பார்ட்டி என்ற கட்சியின் தலைவராக கடந்த 11 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார்.
  • இவர் தன் பதவியை இழந்துள்ளார்.
சன் கிளாஸ்-ஐ ஆட்டைய போட்ட அரசியல்வாதி! சிசிடிவியால் பறிபோன எம்.பி. பதவி.. title=

அரசியல் கட்சி தலைவரும் நாடாளுமன்ற எம்பி யுமான ஒருவர் சூப்பர் மார்க்கெட்டில் ஒரு பொருளைத் திருடியதால்  மாட்டிக் கொண்டுள்ளார் இதனால் அவர் வாழ்க்கையே மாறிவிட்டது அப்படி என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்

நார்வே நாட்டை சேர்ந்தவர் 41 வயதானவர் பிஜோர்னர் மோக்ஸ்னெஸ் . இவர் நார்வேஸ் ரெட் பார்ட்டி என்ற கட்சியின் தலைவராக கடந்த 11 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார் . மேலும் நாடாளுமன்ற எம்பி ஆகவும் இருக்கிறார். இவரது கட்சிக்கு நார்வே நாடாளுமன்றத்தில் 8 உறுப்பினர்களும் உள்ளனர்.

மேலும் படிக்க | அவர் மொபைலை மட்டும் திருடல... என் இதயத்தையும் தான் - ஒரு பெண்ணின் களவாணி காதல் கதை!

இந்த சூழ்நிலையில் தான் கடந்த ஜூன் மாதம் 16 ம் தேதி ஒஸ்லோ விமான நிலையத்தில் அமைந்துள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இருந்து  மோக்ஸ்னெஸ்  ஹுயூகோ பாஸ் (Hugo boss) கம்பனியின் கண் கண்ணாடியை திருடியுள்ளார். இதன் மதிப்பு மட்டுமே 10 ஆயிரம் ரூபாய் என சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தான் அவர் ஜூன் 16ஆம் தேதி கண்ணாடி திருடிய சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாக்களில் வைரலானது.

இதனால் கலக்கமடைந்த அவர் சிக் லீவ் எடுத்துக் கொண்டு சில காலம் சென்று விட்டார். ஆரம்பத்தில் அவர் குற்றச்சாட்டை மறுத்தாலும் பின்னர் சிசிடிவி காட்சிகள் வெளியானதும் அதனை ஒப்புக்கொண்டார். இந்நிலையில் அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கண்ணாடியை திருடியதற்காக அவருக்கு கிட்டத்தட்ட 24 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு மோக்ஸ்னெஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார் அதில் தான் மிகப்பெரிய தவறு செய்து விட்டதாகவும். நான் எப்படி இப்படி ஒரு முட்டாள்தனமான செயலை செய்ய முடியும் என்று பலரும் கேட்டிருக்கிறார்கள். இந்தக் கேள்வியை எனக்குள் நானே கேட்டுக் கொண்டேன் ஆனால் எனக்கு விளக்கம் கிடைக்கவில்லை. நான் தவறு செய்து விட்டேன் அதனால் ஏற்படும் விளைவுகளை நான்தான் எதிர்கொள்ள வேண்டும் இதில் நான் உறுதியாக இருக்கிறேன். இந்த 11 ஆண்டுகளில் எங்கள் கட்சியின் செயல்பாடுகள் மூலம் வரலாற்றை உருவாக்கி இருக்கிறோம். நான் எப்போதும் எனது நார்வே ரெட் பார்ட்டிக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன் என்று பதிவிட்டுள்ளார்.

அதோடு தனது தவறை ஏற்றுக்கொண்டு கடந்த திங்கட்கிழமை அன்று தனது எம்பி பதவியையும் கட்சி தலைவர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார் மோக்ஸ்னெஸ் இதனை அடுத்து ரெட் பார்ட்டியின் தலைவராக மேரிஸ் ஸ்னோ மார்ட்டின்சென் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் பற்றி செய்தி வெளியிட்டுள்ள அந்நாட்டு ஊடகங்கள் தனது ஊழலை மோக்ஸ்னெஸ் வெளிப்படையாக ஒப்புக்கொண்டதால் அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தற்போது சோசியல் மீடியாக்களில் கவனம் ஈர்த்து வருகிறது. இப்படி கூட ஒரு அரசியல்வாதி தான் செய்த தவறை ஒப்புக்கொண்டு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பதவி  விலகுவாரா என்று ஆச்சரியத்தோடு பார்த்து வருகிறார்கள் இணையவாசிகள். 

மேலும் படிக்க | சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பெண்ணுக்கு தூக்கு! எச்சரிக்கும் அரசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News