நியூயார்க்: சர்வதேச உலகில் என்னால் முடிந்த அளவுக்கு காஷ்மீர் பிரச்சினையை கொண்டு செல்கிறேன். ஆனால் அதற்கு சரியான போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. அதற்கு முக்கிய காரணமாக இருப்பது, உலக அளவில் இந்தியா மிகப்பெரிய சந்தையாக இருப்பது தான் எனக் கூறிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் பிரச்சினையில் எங்களுக்கு சறுக்கல் ஏற்பட்டு உள்ளது என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டு உள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை (UNGA) கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பல நாட்டு தலைவர்களை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பொதுவாக பல கேள்விகள் காஷ்மீர் மற்றும் பயங்கரவாதம் பற்றியே இருந்தது.
ஊடகவியலாளர்களுடனான உரையாடலின் போது, காஷ்மீர் பிரச்சினையில் இம்ரான் கான், “சர்வதேச சமூகத்தின் அணுகுமுறையால் நான் ஏமாற்றமடைகிறேன். 80 மில்லியன் ஐரோப்பியர்கள் அல்லது யூதர்கள் அல்லது வெறும் 8 அமெரிக்கர்கள் இப்படி சிறைபிடிக்கப்பட்டிருந்தால், இதேபோன்ற எதிர்வினை இருக்குமா? கட்டுப்பாடுகளை நீக்க மோடிக்கு எந்த அழுத்தமும் இல்லை. நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம், ஏனென்றால் அங்கு 9 லட்சம் இராணுவ வீரர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறது?..'' எனவும் கேள்வி எழுப்பினார்.
காஷ்மீர் விவாகரத்தில் பாகிஸ்தான் புறக்கணிகப்பட்தத்துக்கு காரணம் இந்தியா உலக அளவில் வளர்ந்து வரும் பொருளாதார வலிமை மற்றும் ஆதிக்கத்த கொண்டுள்ளது. 1.2 பில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்தியாவை ஒரு பெரிய சந்தையாக உலக நாடுகள் பார்க்கிறார்கள். என்று அவர் கூறினார்.