உயர் அதிகாரிகளுக்கு முதல்-வகுப்பு விமான பயணம் ரத்து -பாக்., அரசு

உயர் அதிகாரிகள் விமானங்களில் முதல்-வகுப்பு கட்டணத்தில் பயணம் செய்ய தடை விதித்தது பாகிஸ்தான் அரசு...! 

Last Updated : Aug 25, 2018, 12:04 PM IST
உயர் அதிகாரிகளுக்கு முதல்-வகுப்பு விமான பயணம் ரத்து -பாக்., அரசு title=

உயர் அதிகாரிகள் விமானங்களில் முதல்-வகுப்பு கட்டணத்தில் பயணம் செய்ய தடை விதித்தது பாகிஸ்தான் அரசு...! 

பாகிஸ்தானின் 22-வது பிரதமராக தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியின் தலைவரும், அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் கடந்த 18-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். இவரது, பதவியேற்பு விழாவில் இந்தியாவிலிருந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து மட்டும் பங்கேற்றார். 

இந்நிலையில், பாகிஸ்தான் புதிய பிரதமர் இம்ரான் கான் நேற்று தனது இரண்டாவது அமைச்சர்வை கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது. அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

ஜனாதிபதி - அரசாங்க உயர் அதிகாரிகள், பிரதமர், தலைமை நீதிபதி, செனட் தலைவர், தேசிய சட்டமன்ற பேச்சாளர் மற்றும் முதலமைச்சர்கள்  சர்வதேச விமானங்களில் முதல்-வகுப்பு கட்டணத்தில் விமான பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஏன் என்றால் பாகிஸ்தானில் இருந்து இயக்கபடும் சர்வதேச விமானங்களில் இந்தவகை கட்டணங்கள் மற்ற வணிக பிரிவு மற்றும் கிளப் வகுப்பு கட்டணத்தை விட 300 மடங்கு அதிகமாகும்.

அதுபோல் அமைச்சரவையில் அரசாங்க துறைகளில் ஆறு நாட்களுக்கு பதிலாக 5 வேலை நாட்களைக் கொண்டிருக்கும் ஒரு திட்டத்தை அறிமுகபடுத்தபட்டு உள்ளது. வேலை நேரங்களின் எண்ணிக்கை எந்த மாற்றமும் இல்லை நேரம் மற்றும் 8-4 என்பது 9-5 வரை என மாற்றப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது...! 

 

Trending News