ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த உலகளாவிய சக்திகள் பலவேறு வகையில் முயற்சி செய்து வரும் வேளையில், முன்னாள் ஆபாச நட்சத்திரம் ஒருவர் புடினுக்கு புதுமையான ஒரு ஆபரை வழங்கியுள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தப்பட வேண்டும் என உலகம் முழுவதிலும் இருந்து பல வகையில் முறையீடுகள் வைக்கப்படுகின்றன. இதற்கிடையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் போரை நிறுத்தினால், அவருடன் ஒர் இரவைக் கழிக்க தான் தயார் என முன்னாள் ஆபாச நட்சத்திரம் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்கு ஈடாக தான், அவருடம் ஓர் இரவை கழிக்க தயார் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு இத்தாலியின் முன்னாள் ஆபாச நட்சத்திரமான சியோலினா கூறியுள்ளார்.
மேலும் படிக்க | ரஷ்ய அதிபரின் ரகசிய காதலி கர்ப்பம்; 69 வயதில் அப்பா ஆக போகும் புடின்
70 வயதான முன்னாள் ஆபாச நட்சத்திரமான சியோலினாவின் உண்மையான பெயர் இலோனா ஸ்டெல்லர். ஆபாச படங்களில் நடித்து வந்த அவர், பின்னர் அதிக் இருந்து விலகி, இத்தாலிய அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே சுமார் 84 நாட்களாக போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 24 முதல், ரஷ்ய இராணுவம் சிறப்பு இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் உக்ரைனில் பெரிய அளவில் தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதிலுமிருந்து ரஷ்யா தடையை எதிர்கொண்ட பிறகும், புடின் போரில் இருந்து பின் வாங்குவதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆபாச நட்சத்திரம் இத்தாலியின் முன்னாள் எம்.பியும் ஆவார்
70 வயதான முன்னாள் ஆபாச நட்சத்திரம், பார்ன் பட உலகிற்கு குட்பை சொல்லிவிட்டு, அரசியலிலும் முத்திரை பதித்துள்ளார். இத்தாலியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். தற்போது அவர் சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவ் ஆக இருக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் பதிவை பகிர்ந்துள்ள அவர், போரை நிறுத்தினால் புடினுடன் ஓர் இரவைக் கழிக்க முன்வந்துள்ளார். சியோலினா பாடல்கள் மூலமாகவும் பல முறையில் சர்ச்சையில் சிக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
போரை நிறுத்த இதுபோன்ற சலுகைகளை வழங்க முன்வந்துள்ள சியோலினா இவ்வாறு செய்வது முதன்முறையாக அல்ல. முன்னதாக, வளைகுடாப் போரின் தொடக்கத்தில், ஈராக் தலைவர் சதாம் உசேனிடமும் இதே போன்று கூறினார். போரை நிறுத்தவும் அமைதியை மீட்டெடுக்கவும் தான் இப்படியொரு ஆபரை வழங்குவதாக சியோலினா கூறுகிறார்.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுக்கள் எதுவும் பலன் அளிக்காத நிலையில், தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க | உக்ரைன் போரின் தாக்கத்தை உணர்த்தும் மனம் பதற வைக்கும் காட்சிகள்
மேலும் படிக்க | ரஷ்யா போரில் டால்பின்களை களம் இறக்கியுள்ளதா; அமெரிக்கா வெளியிட்டுள்ள பகீர் தகவல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR