ப்ளான்டேசன்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா உள்பட பல எதிர்கட்சி தலைவர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் கைது செய்யப்பட்டுள்ளார்!
சீசர் சியோக்(56) என அடையாளம் காணப்பட்டுள்ள இவர் 14 வெடிகுண்டுகளை பார்சல் மூலமாக அரசியல் தலைவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். கைது செய்யப்பட்ட சீசர் சியோக் வசமிருந்து ஒரு காரும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த காரில் அதிபர் ட்ரம்பின் வாகங்கள் பொருந்திய ஸ்டிக்கர் ஒட்டப்படுள்ளதாகவும், "CNN SUCKS" என்னும் வாசகம் எழுதப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் பிரபல கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரோஸுக்கு வெடிகுண்டு பார்சல் ஒன்று வந்தது. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் வேட்பாளர்களுக்கு கணிசமான அளவு நன்கொடை வழங்கும் சோரோஸை, அதிபர் ட்ரம்ப்பின் குடியரசு கட்சியை சேர்ந்த ஒருவர் குறிவைத்து இந்த தாக்குதலுக்கு திட்டமிட்டதாக கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் உட்பட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும், CNN தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் பைப் வெடிகுண்டுகள் மர்ம முகவரியில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக அமெரிக்க புலனாய்வுத் துறை விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் மல்யுத்த வீரர் சீசர் சியோக் என்பவை FBI கைது செய்துள்ளது. அரசியல் தலைவர்கள் உள்பட அனைவருக்கும் வெடிகுண்டு அனுப்பியது இவர் ஒரொவரே என FBI தெரிவித்துள்ளது. மேலும் இது உள்நாட்டு தீவிரவாத செயல் எனவும் குறிப்பிட்டுள்ளது.
அனுப்பப்பட்ட அனைத்து குண்டுகளும் ப்ளோரிடா மாகாணத்தின் ஒரே பகுதியில் இருந்து சென்றதாக தெரிய வந்த நிலையில், கிடைத்த தகவலை வைத்து FBI சீசர் சியோக்-கை கைது செய்துள்ளனர்!