இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானார்: பிரிட்டனின் சூரியன் அஸ்தமமானது

Queen Elizabeth passed away: இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானார் என்ற செய்தியை பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 9, 2022, 06:40 AM IST
  • இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானார்
  • பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரபூர்வமாக அறிவித்தது
  • 70 ஆண்டு காலமாக மகாராணியாக இருந்த ராணி மறைந்தார்
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானார்: பிரிட்டனின் சூரியன் அஸ்தமமானது title=

பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத்தின் 70 ஆண்டுகள் அரசாட்சி முடிவுக்கு வந்தது. நீண்டகால முடியாட்சியை நடத்தி வந்த  ராணி இரண்டாம் எலிசபெத், தனது 96 வயதில் காலமானார். பிரிட்டனின் சூரியன் அஸ்தமமானது. புதன்கிழமை ராணியின் உடல்நிலை மோசமடைந்தது, பின்னர் அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். வியாழக்கிழமையன்று இங்கிலாந்து மகாராணி மரணமடைந்ததாக பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரபூர்வமாக அறிவித்தது.

ராணி எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி விண்ட்சர், லண்டனில் உள்ள மேஃபேரில் 1926ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி பிறந்தார். யார்க்கின் டியூக் மற்றும் டச்சஸின் முதல் குழந்தைக்கு அலெக்ஸாண்ட்ரா மேரி விண்ட்சர் என்று பெயரிடப்பட்டது . அவரது தந்தை பின்னர் பிரிட்டனின் அரசர் ஆறாவது ஜார்ஜ்  ஆனார், தாய், ராணி எலிசபெத் ஆக முடி சூடினார்.

ராணியின் மறைவுக்கு பிரிட்டனில் தேசிய துக்கம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், அந்நாட்டின் தேசிய கொடிகளும் கீழிறக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து ராணியின் மறைவுக்கு பல நாடுகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். வியாழக்கிழமை (2022, செப்டம்பர் 8) மகாராணியின் உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து, அவரது குடும்பத்தினர்அனைவரும் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் எஸ்டேட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

மேலும் படிக்க | பாகுபலி-2: இங்கிலாந்து ராணிக்கு முதல் சிறப்புக் காட்சி 

1952இல் அரியணைக்கு வந்த ராணி, தனது ஆட்சிக் காலத்தில் மிகப்பெரிய சமூக மாற்றத்தை தன் வாழ்நாளில் செய்துள்ளார். ராணியின் மறைவை அடுத்து, முன்னாள் வேல்ஸ் இளவரசரான ராணியின் மூத்த மகன் சார்லஸ், புதிய அரசராக வழி நடத்துவார்.  

பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இன்று பிற்பகல் பால்மோரலில் ராணி அமைதியாக மறைந்தார். அரசர் மற்றும் அவரது துணைவியான அரசி இன்று மாலை பால்மோரலில் தங்குவார்கள். நாளை அவர்கள் லண்டனுக்குத் திரும்புவார்கள்," என்று கூறப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | இரட்டை குழந்தை ஆனா இரட்டையர்கள் இல்ல

ராணியின் பேரனான இளவரசர் வில்லியமும் அவரது சகோதரர் இளவரசர் ஹாரியும் பால்மோரலுக்கு சென்றுள்ளனர். ராணி எலிசபெத் II, போருக்குப் பிந்தைய சிக்கன நடவடிக்கை காலத்தில் பதவியேற்றார். 

பேரரசில் இருந்து காமன்வெல்த் ஆக பிரிட்டன் மாறியது அது.  பனிப்போரின் நிறைவுக்காலம், ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் இணைந்தது மற்றும் வெளியேறிய காலம் அதில் அடங்கியது.

வின்ஸ்டன் சர்ச்சில் முதல், லிஸ் டிரஸ் என 15 பிரதமர்களை நியமித்துள்ளார் ராணி இரண்டாம் எலிசபெத். லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில், ராணியின் உடல்நிலை குறித்த அறிவிப்புகளுக்காகக் காத்திருந்த மக்கள், அவரது மரணத்தைக் கேள்விப்பட்டதும் அழத் தொடங்கினர்.  

மேலும் படிக்க | சீன மெட்டாவர்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ரோபோ நியமனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News