இங்கிலாந்து அரசின் சுகாதார ஆலோசகர் ஒருவர் ஒரு தீவிரமான குற்றச்சாட்டை விடுத்துள்ளார். மக்களிடம் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை (herd immunity) அதிகரிக்க, மக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவதை உள்ளூர் அமைச்சர்கள் அனுமதிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த காரணத்துக்காகவே கிளப்புகள், பப்கள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட பலவற்றை திறந்து இங்கிலாந்து அரசாங்கம் இங்கிலாந்து பொருளாதாரத்தையும் திறந்துவிட்டுள்ளது என்று அந்த ஆலோசகர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த வாரம் முதல், இங்கிலாந்து (England) அரசாங்கம் தனி மனித இடைவெளியை பின்பற்றுவது மற்றும் முகக்கவசம் அணிவது ஆகிய அனைத்து விதிகளையும் திரும்பப் பெற்று விட்டது. கோவிட் தொற்று எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவிட் அச்சுறுத்தல்களால் இங்கிலாந்து தலைமையும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: UK: ‘முத்த’ சர்ச்சை... பதவி விலகிய பிரிட்டன் சுகாதார அமைச்சர்..!
தற்போது குற்றம் சாட்டியுள்ள ஆலோசகரின் கூற்றுப்படி, போரிஸ் ஜான்சன் அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு இரவு விடுதிகள் மற்றும் பப்களை மீண்டும் திறப்பது குறித்த விஞ்ஞானிகளின் கவலைகள் குறித்து தெரியும். இருப்பினும் அவர்கள் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
பப்கள் மற்றும் கிளப்புகளில் நுழைவதற்கு கோவிட் பாஸ்போர்ட் (Covid Passport) கட்டாயமாக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் திங்களன்று அறிவித்தாலும், செப்டம்பர் வரை இந்த விதி நடைமுறைக்கு வராது.
"மக்கள் அதிகமாக தொற்றுக்கு ஆளாவதை அரசாங்கமே ஊக்குவிப்பதைப் போல உள்ளது. அவர்கள் அனைத்து இடங்களையும் திறந்துவிடுவது இதையே குறிக்கிறது. ஆனால், மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அரசு கூறுவது ஒரு கண்துடைப்பாகவே பார்க்கப்படுகிறது.” என்று லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் சுகாதார உளவியலாளராக இருக்கும் பேராசிரியர் ராபர்ட் வெஸ்ட் கூறினார்.
“இந்த அணுகுமுறை மூலம் தங்களுக்கு கிடைக்கக்கூடும் லாபம், சுகாதார மற்றும் சுகாதார சேவைகளுக்கு ஏற்படும் சேதத்தை விட சிறந்தது என்று அரசாங்கம் கருதுகிறது” என்றும் நிபுணர்கள் கருதுகிறார்கள்.
வெகுஜன தடுப்பூசி (Vaccination) மற்றும் மிக விரைவாக பரவும் புதிய தொற்றுநோய் அலை ஆகியவை இங்கிலாந்தில் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி உருவாக உதவும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இருப்பினும், தொற்றுநோய் பாதிப்புகளை உயர்த்தி அதன் மூலம் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அடைவதற்கான எந்தவொரு நோக்கமும் இல்லை என தொடர்ந்து கூறும் அமைச்சர்கள் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வருகின்றனர்.
ALSO READ: பிரதமர் இம்ரான் கான் இந்தியாவை கண்டு அஞ்சுகிறார்: பாகிஸ்தான் எதிர்கட்சித் தலைவர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR