விமான பயணத்தில் ‘ஸ்னேக் ஆன் எ பிளேன்’ திரைப்படம் போன்ற சம்பவம் நடந்தால் எப்படி இருக்கும்... அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலிருந்து நியூஜெர்சி சென்ற விமானத்தில் பயணித்தவர்களுக்கு இதே நிலை தான் ஏற்பட்டது. விமானம் தரையிறங்குவதற்காக பயணிகள் இறங்கும் போது விமானத்தில் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அங்கே பெரும் பதற்றம் தொற்றிக் கொண்டது. பாம்பை கண்டதும் பிஸினஸ் வகுப்பில் இருந்த பயணிகள் அலறியடித்து தங்கள் கால்களை மேலே இழுத்துக் கொண்டு சீட்டின் மேல் வைத்துக் கொண்டனர். பின்னர் விமான நிலையத்தில் இருந்து விலங்கு கட்டுப்பாட்டு அதிகாரிகள் பாம்பை மீட்டு, பின்னர் அதனை காட்டுக்குள் விட்டனர்.
விமான நிலைய வனவிலங்கு செயல்பாட்டு ஊழியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் யுனைடெட் நிறுவனத்தின் விமானத்தில் இருந்த பாம்பை அகற்றி பின்னர் அதை காட்டுக்குள் விடுவித்ததாக, நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி துறைமுக ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், விமானத்தின் போக்குவரத்து எதுவும் பாதிக்கப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் இருந்த பயணிகள் பாம்பைக் கண்டதும், அது குறித்து விமான பணியாளர்களை எச்சரித்தனர் என்றும் நிலைமையை கையாள விமான நிறுவனம் உரிய அதிகாரிகளை விமானத்திற்கு அனுப்பி வைத்தது.
மேலும் படிக்க | Cheap Flight Tickets: தீபாவளியில் பம்பர் சலுகை, வெறும் ரூ.1499-க்கு விமான டிக்கெட்
பாம்பை அகற்றிய பின்னர் பயணிகள் தங்கள் சாமான்களுடன் இறக்கிவிடப்பட்டதாகவும், விமானத்தில் வேறு பாம்பு அல்லது ஊர்வன ஏதேனும் உள்ளதாக என முழுமையாக சோதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் விமானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு புளோரிடா மாவட்டத்தில் அதிகம் காணப்படும் பாம்பு என்றும், அது விஷம் உள்ளபாம்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.
விமானத்திற்குள் பாம்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது முதல் முறை அல்ல. இந்த ஆண்டு பிப்ரவரியில், மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து தவாவுக்குச் சென்ற ஏர் ஏசியா விமானத்தின் ஒளிரும் பகுதிக்குள் பாம்பு ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது. ஒளிரும் பகுதியில் பாம்பு இருப்பதை பார்த்த பயணிகள் வீடியோ பதிவு செய்தனர். இந்த வீடியோ வைரலாகியது.
மேலும் படிக்க | தாம்பரம் to திருநெல்வேலி; தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு தொடங்கியது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ