துபாய்: நமது உலகில் பல நாடுகள் உள்ளன. இவற்றுக்கிடையிலான உறவுகளில் பல வினோதங்கள் உள்ளன.
அப்படி ஒரு வினோதத்தை இன்றைய பதிவில் காணலாம். ஒரு காலத்தில் வைரங்கள் திருடப்பட்டதால் இரு நாடுகள் உறவை முறித்துக்கொண்டன. சுமார் 30 ஆண்டுகளாக இந்த இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லை. ஆனால் இப்போது இரு நாடுகளும் மீண்டும் நண்பர்களாகிவிட்டனர்.
சவுதி அரேபியா (Saudi Arabia) மற்றும் தாய்லாந்து ஆகியவை தான் இந்த இரண்டு நாடுகள். தாய்லாந்து வைரங்களைத் திருடியதாக குற்றம் சாட்டிய சவூதி அரேபியா, அந்த நாட்டுடனான தனுடைய உறவுகளை முறித்துக் கொண்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. பரபரப்பான நகை திருட்டு சம்பவத்திற்குப் பிறகு எழுந்த மூன்று தசாப்த கால அவநம்பிக்கை மற்றும் பகைமையை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ள இரு நாடுகளும், முழு தூதரக உறவுகளை மீண்டும் தொடங்க உத்தரவிட்டுள்ளன.
30 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு
தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா சவூதி அரேபியாவிற்கு மேற்கொண்ட அரசியல் சுற்றுப்பயணத்தின் போது இரு நாடுகளும் இந்த முடிவை எடுத்துள்ளன. 1989 ஆம் ஆண்டு நடந்த திருட்டு சம்பவத்திற்குப் பிறகு உறவுகள் மோசமடைந்ததை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே நடந்த முதல் உயர்மட்ட சந்திப்பு இதுவாகும். இந்த திருட்டு சம்பவத்தால் தாய்லாந்துடனான தூதரக உறவை சவுதி அரேபியா துண்டித்தது. இந்த திருட்டு காரணமாக பல மர்ம கொலைகளும் நடந்தன. இந்த நிகழ்வு 'ப்ளூ டைமண்ட் கேஸ்' என்று அழைக்கப்படுகிறது.
அரசியல் உறவுகள் வலுப்படுத்தப்படும்
சவூதி இளவரசர் முகமது பின் சல்மான், பிரயுத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி, திருட்டை மறந்து இரு நாடுகளுக்கு இடையே பொருளாதார, பாதுகாப்பு மற்றும் அரசியல் உறவுகளை வலுப்படுத்த முயன்றதாக அரச மாளிகையில் நடந்த சந்திப்புக்குப் பிறகு அதிகாரப்பூர்வ ‘சவூதி பத்திரிகை நிறுவனத்துக்கு’ அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் முதல் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் வரை பல்வேறு துறைகளில் கூட்டு முதலீட்டின் வழிகளை இரு நாடுகளும் ஆராயும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், மே மாதம் ரியாத்தில் இருந்து பாங்காக்கிற்கு நேரடி விமான சேவையை தொடங்க உள்ளதாக 'சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ்' தெரிவித்துள்ளது.
ALSO READ | பாகிஸ்தானில் கலவரத்தை தூண்ட இந்தியா சதி; பாக். உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத்
சவுதியின் 50 காரட் வைரம் திருடப்பட்டது
ப்ளூ டயமண்ட் சம்பவம் 1989 இல் நடந்தது. இந்த சம்பவத்தில், தாய்லாந்து இளவரசர் பைசல் பின் ஃபஹத் அரண்மனையிலிருந்து பல மதிப்புமிக்க பொருட்களை தாய்லாந்து ஊழியர் ஒருவர் திருடினார். இவற்றில் 50 காரட் கொண்ட நீல வைரமும் அடங்கும். பின்னர் அந்த ஊழியர் தாய்லாந்துக்கு தப்பிச் சென்று அங்குள்ள நகைக்கடையில் இதை விற்றுள்ளார்.
தாய்லாந்து (Thailand) போலீசார் இதை கண்டுபிடித்ததும், திருட்டில் ஈடுபட்ட குற்றவாளி கைது செய்யப்பட்டு, பெரும்பாலான நகைகள் மீட்கப்பட்டன. இதையடுத்து, திருடப்பட்ட பொருட்களை சவுதி அரேபியாவுக்கு திருப்பி அனுப்பியபோது, நீல வைரம் காணாமல் போனதும், திருப்பி அனுப்பப்பட்ட மற்ற நகைகளில் பாதியும் போலியானது என்பதும் தெரியவந்தது. இதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மோசமானது.
தற்போது நிகழ்கால் அரசியல் தலைவர்களின் முயற்சியால் உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ALSO READ | விமானத்தின் ‘டயர்’ பகுதியில் 11 மணி நேரம் பயணித்து உயிர் தப்பிய அதிசயம்.!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR