வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மியாமி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். ரகசிய ஆவணங்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மியாமி நீதிமன்றத்தில் அதிகாரிகளிடம் முறையாக சரணடைந்த பின்னர் டிரம்ப் கைது செய்யப்பட்டதாக என்பிசி நியூஸ் தெரிவித்துள்ளது. சட்ட விரோதமாக ரகசிய ஆவணங்களை வைத்திருந்ததாக தன் மீதான 37 குற்றச்சாட்டுகளையும் டிரம்ப் மறுத்துள்ளார். டிரம்பின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஜூரி விசாரணையை கோரினர். அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ள டிரம்ப்பின் பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. எனினும், அவர் விசாரணைக்கு பின் விடிவிக்கப்பட்டார்.
அமெரிக்க அதிபர் ஜோ பிடனை விமர்சனம் செய்த டிரம்ப்
டிரம்பின் வழக்கறிஞர் டோட் பிளான்ச் நீதிபதியிடம், 'அனைத்து குற்றச்சாட்டுகளையும் நாங்கள் நிச்சயமாக நிராகரிக்கிறோம்' என்றார். விசாரணையின் போது, டிரம்ப் லேசாக குனிந்த படி, முகத்தில் புன்னகையுடன் அமர்ந்திருந்தார். இதன் போது அவர் எதுவும் பேசவில்லை. செவ்வாயன்று நீதிமன்றத்தை விட்டு வெளியேறிய டிரம்ப், நியூ ஜெர்சியின் பெட்மின்ஸ்டரில் உள்ள தனது கோல்ஃப் கிளப்பை அடைந்தார். தனது தனிப்பட்ட ஜெட் விமானத்தில் புறப்படுவதற்கு முன், டிரம்ப் தனது சமூக தளமான ட்ரூத் சோஷியலில், 'நன்றி மியாமி. நம் நாட்டிற்கு இது போன்ற ஒரு சோகமான நாளில் இதுபோன்ற அன்பான வரவேற்பு.' இங்கு அவர் தனது உரையில் அமெரிக்க அதிபர் ஜோ பிடனை கடுமையாக விமர்சனம் செய்தார்.
மேலும் படிக்க | மனிதர்களின் இடத்தை நிரப்பும் செயற்கை நுண்ணறிவு! விமானத்தை இயக்க AI தொழில்நுட்பம்
நீதிமன்றத்தில் சரணடைந்த டிரம்ப்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ரகசிய ஆவணங்களை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டில் முறையாக சரணடைவதற்காக மியாமியில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் செவ்வாய்கிழமை வந்தடைந்தார். மியாமியில் உள்ள தனது மார்-ஏ-லாகோ தோட்டத்தில் ரகசிய ஆவணங்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டொனால்ட் ட்ரம்ப் வாகனங்கள் அணிவகுக்க செவ்வாய்க்கிழமை பிற்பகல் நீதிமன்ற வளாகத்தை வந்தடைந்தார்.
ஆதரவாளர்கள் ஆதரவு தெரிவித்தனர்டிரம்ப் நீதிமன்றத்திற்கு வந்தபோது அவரது ஆதரவாளர்கள் அவரை நோக்கி கை அசைத்தனர், அதே நேரத்தில் அவரது எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். முன்னாள் அமெரிக்க அதிபர் எதிர்கொள்ளும் இரண்டாவது கிரிமினல் வழக்கு இதுவாகும். 2016 தேர்தல் பிரச்சாரத்தின் போது செலுத்தப்பட்ட பணம் தொடர்பான பொய்யான தகவல் அளித்ததாக, நியூயார்க் நீதிமன்றத்தில் டிரம்ப் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் எந்த தவறும் செய்யவில்லை என்றும், அரசியல் எதிரிகளால் நியாயமற்ற முறையில் குறிவைக்கப்படுவதாகவும் கூறினார்.
ட்ரம்ப் தன் மீதான குற்றச்சாட்டினை கடுமையாக எதிர்த்து வருவதுடன், இது தன்னை கவிழ்க்கும் சூழ்ச்சி என்றும், அமெரிக்கா அதிபர்களில் தான் மட்டுமே பொய் வழக்குகளால் துன்புறுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கான ஆதாரங்கள் இன்னும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வராத நிலையில் இதனை ஒரு முக்கிய காரணியாகக் கொண்டு அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அவர் எதிர்த்து வருகிறார்.
மேலும் படிக்க | AI இறந்தவர்களை மீண்டும் ’சிந்திக்க’ உயிர்ப்பிக்கும் செயற்கை நுண்ணறிவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ