சிரியாவில் அதிபராக உள்ள பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 7 ஆண்டாகளாக உள்நாட்டுப்போர் நீடித்து வருகிறது. இதில் இதுவரை குறைந்தது 3¼ லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இத்லிப் மாகாணம், கான் ஷேக்குன் நகரில் போர் விமானங்கள் மூலம் விஷ வாயு தாக்குதல் நடத்தின. இந்த விஷ வாயு தாக்குதலில் மக்கள் கூட்டம் கூட்டமாக பலியாகி வருகின்றனர். இதுவரை குழந்தைகள் உள்பட கிட்டத்தட்ட100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிரிய ராணுவத்தின் போக்கிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிரியாவின் விமானப் படை தளம் மீது அமெரிக்க ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
வீடியோ:-
#BREAKING: Statement from @DeptOfDefense spokesman on U.S. strike in Syria - https://t.co/optQFaIv4d pic.twitter.com/6NRbLhbHRp
— U.S. Navy (@USNavy) April 7, 2017
மத்திய தரைக்கடலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த போர்க்கப்பல்களில் இருந்து 60 ஏவுகணைகள் வீசப்பட்டன. அவை விஷகுண்டு தாக்குதல் நடத்திய சாய்ரத் விமானப்படை தளத்தின் மீது விழுந்து தாக்கியது. நரம்பு மண்டலத்தை பாதிக்கும் விஷவாயு தாக்குதலை கண்டித்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.