தெஹ்ரான்: ஹிஜாப் சட்டங்களை மீறி, நாட்டின் கட்டாய ஹிஜாப் விதிகளை மீறியதான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு உயிரிழந்தகுர்தி பெண் மஹ்சா அமினி இறந்து ஒரு வருடமான நிலையில், அந்நாட்டு அரசு, ஹிஜாப் ஆடைக்கட்டுப்பாட்டை மேலும் கடுமையாக்கியிருக்கிறது. அரசுக்கு எதிரான போராட்டங்கள் வேகத்தை இழந்துவிட்டது போல இருந்தாலும், ஈரானின் மதவாத ஆட்சி இன்னும் இது போன்ற கூடுதல் அதிர்ச்சிகளைக் கொடுக்கும் அரசாகவே இருக்கிறது.
அமெரிக்க பொருளாதாரத் தடைகள் காரணமாக பொருளாதாரம் முடங்கியிருக்கும் நிலையில், சீர்திருத்தங்கள் தொடர்பாக சிந்திக்க வேண்டிய ஒரு அரசு, பெண்கள் மீதான ஆடைக்கட்டுப்பாடு தொடர்பான பல போராட்டங்களை எதிர்கொள்கிறது.
மஹ்சா அமினியின் நினைவுநாள்
ஹிஜாப் சட்டங்களை மீறியதன் காரணமாக 2022 செப்டம்பர் 16ம் நாளன்ற காவலில் வைக்கப்பட்ட 22 வயது இளம்பெண் மஹ்சா அமினியின் நினைவு தினத்திற்கு பிறகு ஹிஜாப் சட்டங்களை கடுமையாக்குவது என்பது, மக்களுக்கு அரசின் கடுமையான நிலைப்பாடு குறித்து வெளிப்படையான நடவடிக்கையாக இருக்கிறது.
ஆடைக்கட்டுப்பாட்டை எதிர்த்து போராட்டங்கள்
ஆடைக்கட்டுப்பாடு தொடர்பாக கடந்த வருடம் நாடு முழுவதும் நடைபெற்ற கலவரங்களில் 71 சிறார்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்றும், கணிசமான அளவில் மக்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டிவருவதும், போராட்டங்களில் தொடர்புடைய 7 பேருக்கு ஈரான் மரண தண்டனையும் நிறைவேற்றியது என்பது அந்நாட்டு அரசின் கடுமையான ஆடைக்கட்டுப்பாடு நிலைப்பாட்டை குறிப்பதாக இருக்கிறது.
மேலும் படிக்க | ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவருக்கு தூக்கு தண்டனை விதித்த ஈரான்!
ஈரானின் கடுமையான கட்டுப்பாடுகள்
ஷியா முல்லாக்களால் இறுக்கமாகக் கட்டுப்படுத்தப்பட்ட ஈரானில் சீர்திருத்தங்கள் மற்றும் பெண் விடுதலையை முன்னெடுத்த இளம் குரலாக எழுந்த மஹ்சா அமினியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தன்று, அவருக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் நடப்பதை தடுக்கும் வகையில் ஈரான் அரசு, பலரை தடுப்புக் காவலில் எடுத்ததாகவும் செய்திகள் வெளியாகின.
ஹிஜாப் அணியாத பெண்களுக்கு சேவை செய்யும் வணிக உரிமையாளர்கள் மற்றும் அதற்கு எதிராக அமைப்பு நடத்தும் ஆர்வலர்களுக்கும் புதிய மசோதாவில் தண்டனைகளை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. ஹிஜாப் சட்டத்தை மீறும் பெண்களுக்கும் அதை ஆதரிப்பவர்களுக்கும் கடுமையான தண்டனை விதிக்கும் ஈரான் அரசின் மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
மசோதாவின் செல்லுபடித்தன்மை
இது மூன்று ஆண்டுகளுக்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும், இதில் பெண்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் மற்றும் 180 மில்லியன் முதல் 360 மில்லியன் ரியால்கள் ($3,651-$7,302) வரை அபராதம் விதிக்கப்படும். சட்டத்தை மீறுபவர்களுக்கு 10 நாட்கள் முதல் இரண்டு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது 5,000 முதல் 500,000 ரியால் வரை அபராதம் விதிக்கப்படும்.
ஒப்புதலுக்காக காத்திருக்கும் மசோதா
முன்மொழியப்பட்ட சட்டம், ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் "நிர்வாணத்தை ஊக்குவிப்பவர்களுக்கு" அல்லது "ஹிஜாபை கேலி செய்பவர்களுக்கு" (promoting nudity" or "making fun of the hijab) அபராதம் விதிக்கும். ஹிஜாப் அணியாமல் வாகனம் ஓட்டும் பெண்கள் மற்றும் பொருத்தமான ஆடைகளை அணியாத பயணிகள் வாகனங்களில் பயணித்தால், அதற்காக வாகனங்களின் உரிமையாளர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று மசோதா கூறுவதாக AFP செய்தி நிறுவனம் கூறுகிறது.
இந்த மசோதாம், நேற்று (2023 செப்டம்பர் 20, புதன்கிழமை) வாக்கெடுப்புக்கு விடப்பட்டது, ஈரானின் 290 இடங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 152 சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த ஆடைக்கட்டுப்பாடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தனர். இந்த மசோதா இப்போது அரசியலமைப்பு கண்காணிப்பாளராக செயல்படும், மதகுரு அமைப்பான கார்டியன் கவுன்சிலின் ஒப்புதலுக்காக அனுப்பப்படுகிறது. .
மேலும் படிக்க | பொது வெளியில் நடனமாடிய ஈரானிய இளம் தம்பதியினருக்கு 10 ஆண்டுகள் சிறை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ