JeM-ன் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க UN-க்கு அழுத்தம்: பிரான்ஸ்

ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவனான மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அழுத்தம் கொடுக்கப்படும் என ஃபிரான்ஸ் அறிவித்துள்ளது.

Last Updated : Mar 7, 2019, 01:39 PM IST
JeM-ன் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க UN-க்கு அழுத்தம்: பிரான்ஸ் title=

ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவனான மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அழுத்தம் கொடுக்கப்படும் என ஃபிரான்ஸ் அறிவித்துள்ளது.

ஜம்மு- காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில், கடந்த 14- ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட தாக்குதலில்CRPF வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டுவரும் ஜெய்ஷ்-இ-முகம்மது எனும் தீவிரவாத அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்று கொண்டது. இதையடுத்து, இந்திய ராணுவம் இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்தது. இன்ட பதில் தாக்குதலுக்கு, உலக நாடுகள் முழுவதும் இந்தியாவுக்கு தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவனான மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அழுத்தம் கொடுக்கப்படும் என ஃபிரான்ஸ் தெரிவித்துள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது, ஐ.நா. சபையால் தீவிரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அந்த இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரை, சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றிபெறவில்லை.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்றான சீனா அந்த முயற்சிகளை தடை செய்துவிட்டது. புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, மசூத் அசாரை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மூலம் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கச் செய்யும் முயற்சிகள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஐ.நா. சபையில் ஃபிரான்ஸ் இதற்கு அழுத்தம் கொடுக்கும் என்று, இந்தியாவுக்கான ஃபிரான்ஸ் தூதர் அலெக்சாண்ட்ரே ஜீக்லர் (Alexandre Ziegler) தெரிவித்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாகவே இதற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும், ஒரு தீவிரவாத இயக்கத்தின் தலைவன் இன்னும் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்படாமல் இருப்பது அர்த்தமற்றது என்றும் ஃபிரான்ஸ் தூதர் ANI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். 

 

Trending News