ராஜஸ்தான் பில்வாராவின் ரைசிங் புராவின் காடுகளில் கடுமையான வெப்பம் காரணமாக 11 மயில்கள் உயிரிழந்துள்ளது!
ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள பில்வாராவின் ரைசிங் புராவின் காட்டுப்பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில், அரியவகை பறவைகள் மற்றும் விளங்குகள் வாழ்ந்து வருகிறது.
வடமாநிலங்களில் வெயில்தக்கத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றநிலையில் நேற்று அக்னி நட்சத்திரம் துவங்கியுள்ளது. இதை தொடர்ந்து, அனல் கற்றுவீசி வருகிறது. மனிதர்களாலேயே தாங்கமுடியாத வெப்பத்தை அளவில் சிறியதாக இருக்கும் பறவைகள் எப்படி தாங்கும். அக்னி நட்சத்திரம் துவங்கிய முதல் நாளே ராஜஸ்தான் காட்டுப்பகுதியில் வாழ்ந்துவரும் பறவையினங்களான 11 மயில்கள் கடுமையான வெப்பத்தை தாங்கமுடியாமல் உயிரிழந்துள்ளனர்!
11 peacocks died due to extreme heat in forests of Bhilwara's Raisingh Pura. Veterinary Official & Rangers of Forest Department saved two other peacocks that were found unconscious in the forest #Rajasthan pic.twitter.com/dnNOncCTiI
— ANI (@ANI) May 26, 2018
இந்நிலையில், வனத் துறையின் கால்நடை அதிகாரி மற்றும் ரேஞ்சர்ஸ் மேலும் மயக்க நிலையில் இருந்த இரண்டு மயில்களை காப்பாற்றி சிகிச்சையளித்துள்ளனர்.!