Kausalya Reason For Why She Is Not Married : சாதாரண வாழ்வை தாண்டி ஒரு சில திரை நட்சத்திரங்கள், தங்களுக்கு ஏற்ற ஆள் கிடைக்கவில்லை என்றால் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வருகின்றனர். அப்படி அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் போவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. முந்தைய உறவில் ஏற்பட்ட கசப்பு, தனது கெரியருக்கு முக்கியத்துவம் கொடுப்பது, போன்ற பல காரணங்கள் உள்ளன.
கௌசல்யா:
45 வயதிற்கு மேல் ஆகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நாயகிகளில் ஒருவர் கௌசல்யா. கோலிவுட் திரையுலகில் 90ஸ் மற்றும் 2000 காலங்களில் பிரபல நடிகையாக விளங்கியவர், கௌசல்யா. திரையுவதற்கு வந்த புதிதில் இருந்து நாயகியாக நடித்துக் கொண்டிருந்தவரை எப்போதும் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களின் நடித்து வந்தவர் இவர்.
மலையாள சினிமா மூலம் திரையுலத்திற்கு வந்திருந்தாலும் இவருக்கு பெரும் புகழை தேடி தந்தது தமிழ் திரையுலகம்தான். விஜய், அஜித், விஜயகாந்த் உள்ளிட்ட பலருடன் படங்களில் நடித்திருக்கும் இவர் இளமையாக இருந்தபோது ஹீரோனாக வலம் வந்தார். ஆனால் இப்போது துணை கதாபாத்திரங்களிலும் அம்மா அல்லது அண்ணி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
திருமணம் குறித்து பேச்சு…
கௌசல்யா சில ஆண்டுகளுக்கு முன்னர் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார். தற்போது தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் மனம் திறந்து பேசினார். அந்த பேட்டியில் தான் திரையுலகில் நடித்து வந்த சமயத்தில் தனக்கும் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கும் தொடர்பு இருப்பதாக சிலர் கிசுகிசு எழுதியதாகவும், அது உண்மை அல்ல என்றும் தெரிவித்திருந்தார். திருமணத்தை அழகான உறவாக பார்க்கும் அவர் தனக்கும் ஒரு காதல் உறவு இருந்ததாகவும், அந்த உறவு திருமணம் வரை சென்று நின்று விட்டதாகவும் கூறினார்.
காரணம்…
தனக்கு 45 வயதிற்கு மேலாகியும் ஏன் இன்னும் திருமணம் நடக்கவில்லை என்பது குறித்தும் கௌசல்யா பேசினார். அப்போது, குடும்பம் குழந்தை என்ற பெரிய பொறுப்புகளை தன்னால் கையாள முடியுமா என்ற சந்தேகம் இருப்பதாகவும், இந்த காரணத்தினாலேயே தன்னால் இப்போது வரை திருமணம் குறித்து முடிவு செய்ய முடியவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
விஜய் குறித்து பேச்சு:
நடிகர் விஜய்யும் கவுசல்யாவும், தாங்கள் இளமையாக இருந்தபோது ஜோடியாக இரண்டு படங்களில் நடித்திருக்கின்றனர். அதில் ஒரு படம் நேருக்கு நேர், இன்னொன்று பிரியமுடன். இரு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற படங்களாகும். விஜயுடன் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து நேர்காணலில் பேசிய சௌந்தர்யா, பலர் அவரை அமைதியானவர் என கருதுவதாகவும் ஆனால் உண்மையில் விஜய் ஜாலியாக அரட்டை அடிக்க கூடிய ஆள் என்றும் பேசியிருக்கிறார்.
மேலும் விஜய் உடன் பிரியமுடன் படத்தில் நடித்து வந்தபோது தனக்கு பல்வேறு பட வாய்ப்புகள் வந்ததாகவும், அதற்காக விஜய் தனக்கு ஒரு சாக்லேட் வாங்கி கொடுத்ததாகவும் கூறியிருக்கிறார்
சீரியலிலும்..
நடிகைகள் பலர், சினிமாவை தாண்டி சீரியல்களிலும் நடிப்பது வழக்கம். அந்த வகையில் நடிகை கௌசல்யாவும் 2004ஆம் ஆண்டு முதல் சில சீரியல்களில் நடித்து வருகிறார். கடைசியாக சுந்தரி சீரியலில் கெஸ்ட் ரோலில் இவர் வந்திருந்தார். வருடத்திற்கு ஒரு படத்தில் நடித்து வரும் சௌந்தர்யா, 2024ஆம் ஆண்டு புருஷோத்தமுடு படத்தில் கடைசியாக நடித்தார். அதன் பிறகு மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்தார்.
மேலும் படிக்க | 41 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாத த்ரிஷா! காரணம் என்ன? அவரே சொன்ன விஷயம்..
மேலும் படிக்க | 55 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாத எஸ்.ஜே.சூர்யா! காரணம் இதுதானா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ