வரும் 6-ம் தேதி நாடு முழுவதும் இருந்து 13 லட்சம் மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுத இருப்பதாக சிபிஎஸ்இ அறிவித்து உள்ளது.
இந்த நீட் தேர்வை கடந்த டை விட 1.65 லட்சம் பேர் கூடுதலாக எழுதுகின்றனர். கடந்த ஆண்டு 11.35 லட்சம் பேர் எழுதிய நிலையில் இந்த ஆண்டு 13 லட்சம் பேர் நாளை தேர்வு எழுத உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு 82 ஆயிரம் மாணவ மாணவிகளை தேர்வை எதிர்கொண்ட நிலையில், இந்த ஆண்டு 1லட்சத்து 10ஆயிரம் மாணவ மாணவிகள் எழுத இருக்கின்றனர்.
தமிழகத்தில் 170 தேர்வு மையங்களில், 1 லட்சத்து 7 ஆயிரத்து 288 மாணவர்கள், நீட் தேர்வை எதிர்கொள்கின்றனர்.
தமிழகத்தில் சென்னை, கோவை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், நாமக்கல், சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் தேர்வு நடைபெற உள்ளது. இருந்தாலும், தமிழகத்தை சேர்ந்த சுமார் 1500 மாணவ மாணவிகளுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கியது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நீட் தேர்வு ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், அஸ்ஸாமி, வங்காளம், குஜராத்தி, மராத்தி, ஒரியா, உருது ஆகிய 11 மொழிகளில் தேர்வு நடைபெறுகிறது.
தேர்வில் 180 கேள்விகள் கேட்கப்படும். அவைகள் அனைத்தும், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என நான்கு பாடங்களில் மாணவர்கள் ஏற்கனவே படித்த பாடத்தில் இருந்து தலா 45 கேள்விகள் கேட்கப்படும்.
அதன்படி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேர்வு நடைபெறும். மாணவர்கள் காலை 7.30 மணிக்கு தேர்வு மையங்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று சிபிஎஸ்இ அறிவித்து உள்ளது.
மாணவர்களின் தேர்வு எழுதும் அனுமதி அட்டை காலை 9.45 மணி வரை சோதனை செய்யப்படும். மாணவர்கள் 9.30 மணிக்கு மேல் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும்,
பிற மாநிலங்களில் தேர்வெழுதினாலும், மாணவர்கள் அவர்கள் தேர்வு செய்த மொழிகளிலேயே வினாத்தாள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.