தற்போதையா காலகட்டத்தில் அராசாங்கத்தின் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாகி வந்து கொண்டிருகிறது. வருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து, புதிய வங்கி கணக்குகளை திறப்பது வரை ஆதார் எண் அவசியமாகி விட்டது.
அதன்படி ஆதார் பயன்படுத்தும்போது, அதை உறுதி செய்வதற்காக, கைவிரல் ரேகை, கண்விழிப் படலம் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. இதைத் தவிர, ஆதார் எண்ணை பயன்படுத்துவதற்காக, OTP எனப்படும் ஒருமுறை பயன்படுத்தும் ரகசிய எண்ணையும் பயன்படுத்தலாம்.
இந்நிலையில் தற்போது முக வடிவமைப்பை பயன்படுத்தி, ஆதாரை உறுதி செய்யும் வசதி, ஜூலை, 1 முதல், நடைமுறைக்கு வரும்' என, தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, வரும் மார்ச் 3-ம் தேதிக்குள் பான் என்னும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த கால அவகாசத்தை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து, மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு முன்பாக கடந்த ஆண்டில் ஜூலை 31, ஆகஸ்ட் 31, டிசம்பர் 31 ஆகிய தேதிகளில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யும்போது, ஆதார் எண்ணையும் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கிக் கணக்கு எண் மற்றும் மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் கால வரையறையின்றி நீட்டித்து உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.
பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பன வழக்கை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
வங்கிக் கணக்கு எண் மற்றும் மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் கால வரையறையின்றி நீட்டித்து உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பன வழக்கை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.