7வது ஊதியக் கமிஷன்: மத்திய ஊழியர்களின் காத்திருப்பு முடிவடையவுள்ளது. இப்போது ஊழியர்களின் சம்பளம் 40 ஆயிரம் ரூபாய் வரை உயரப் போகிறது. ஊழியர்களின் அகவிலைப்படி எவ்வளவு உயரும் என்பது இன்று தெரியவரும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தப் போகிறது. ஏஐசிபிஐ-இன் இதுவரையிலான தரவுகளின்படி, 5% அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்பது தெரிகிறது. இன்று மே மாதத்திற்கான ஏஐசிபிஐ பணவீக்க தரவு வர உள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரித்தால், அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 6 சதவீதம் உயர வாய்ப்புள்ளது. இப்படி நடந்தால், அகவிலைப்படி உயர்வால், ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும் என இந்த பதிவில் காணலாம்.
அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்?
அகவிலைப்படியின் அதிகரிப்பு ஏஐசிபிஐ-இன் தரவைப் பொறுத்தது. மார்ச் மற்றும் ஏப்ரல் 2022 இல் ஏஐசிபிஐ குறியீட்டில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக அகவிலைப்படியில் 5% அதிகரிப்பது தெளிவாகியுள்ளது. அதாவது, இப்போது ஊழியர்களின் டிஏ 34 சதவீதத்தில் இருந்து 39 சதவீதமாக உயரும். எனினும், இன்று மே மாத புள்ளிவிவரங்கள் வந்த பிறகு, ஊழியர்களின் அகவிலைப்படி 6% அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.
ஏஐசிபிஐ இன்டெக்ஸ் சொல்வது என்ன?
இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், ஏஐசிபிஐ குறியீட்டில் சரிவு இருந்தது. ஆனால் அதன் பிறகு ஏஐசிபிஐ- இன் புள்ளிவிவரங்கள் அதிகரித்து வருகின்றன. ஜனவரியில் 125.1, பிப்ரவரியில் 125 மற்றும் மார்ச் மாதத்தில் 126 ஆக இந்த தரவு இருந்தது.
மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலை மாதம், டிஏ, இபிஎஃப், கிராஜுவிட்டி அனைத்திலும் பம்பர் ஏற்றம்
இப்போது ஏப்ரல் மாதத்தின் புள்ளிவிவரங்களும் வெளிவந்துள்ளன. ஏப்ரல் மாதத்திற்கான தரவுகளின்படி, ஏஐசிபிஐ குறியீடு 127.7 ஆக உள்ளது. இது 1.35 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது மே மாதத்திற்கான எண்ணிக்கை வரவுள்ளது. மே மாதத்திலும் இந்த எண்ணிக்கை அதிகரித்தால், டிஏ-வில் 6% அதிகரிப்பு இருக்கலாம்.
ஊதியம் எவ்வளவு உயரும்?
அரசு அகவிலைப்படியை 6% ஆக உயர்த்தினால், மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 34% லிருந்து 40% ஆக உயரும். அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தில் எவ்வளவு உயர்வு இருக்கும் என்று பார்ப்போம்.
அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு
1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ 56,900
2. புதிய அகவிலைப்படி (40%) - ரூ.22,760/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (34%) - ரூ.19,346/மாதம்
4. அகவிலைப்படியில் அதிகரிப்பு - 22,760-19,346 = ரூ 3,414/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 3,414 X12 = ரூ 40,968
குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு
1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ.18,000
2. புதிய அகவிலைப்படி (40%) - ரூ.7,200/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (34%) - ரூ.6120/மாதம்
4. அகவிலைப்படியில் அதிகரிப்பு - 7200-6120 = ரூ.1080/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 1080 X12 = ரூ 12,960
மேலும் படிக்க | 7th Pay Commission: விரைவில் ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தில் பம்பர் ஏற்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR