IDBI வங்கியின் இந்த SSP திட்டத்தில் பணம் சேமிப்பதுடன் சம்பாதிக்கவும் முடியும், விவரம் உள்ளே

IDBI -யின் முறையான சேமிப்புத் திட்டம் மூலம், உங்கள் வசதிக்கு ஏற்ப உங்கள் சேமிப்புகளை ஒன்று சேர்த்து உங்கள் வழக்கமான வருமானத்துடன், ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்யலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 23, 2021, 03:07 PM IST
  • ஐடிபிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பணம் ஈட்ட நல்ல வாய்ப்பை அளித்து வருகிறது.
  • உங்கள் வழக்கமான வருமானத்துடன், ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை நீங்கள் டெபாசிட் செய்யலாம்.
  • இந்த திட்டத்திற்கு நெட் பேங்கிங் / கோ மொபைல் + ஆப் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
IDBI வங்கியின் இந்த SSP திட்டத்தில் பணம் சேமிப்பதுடன் சம்பாதிக்கவும் முடியும், விவரம் உள்ளே title=

புதுடெல்லி: ஐடிபிஐ வங்கி (IDBI Bank) தனது வாடிக்கையாளர்களுக்கு பணம் ஈட்ட நல்ல வாய்ப்பை அளித்து வருகிறது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் எளிதான மாத தவணைகள் மூலம் தங்களது வருவாயை அதிகரிக்க முடியும். இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இது குறித்த விவரங்களை IDBI வங்கி ஒரு ட்வீட் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது. 

வங்கியின் திட்டம் என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள்
IDBI -யின் முறையான சேமிப்பு திட்டம், அதாவது IDBI Systematic Savings Plan (SSP) உங்கள் வசதிக்கு ஏற்ப உங்கள் சேமிப்புகளைச் சேர்க்க உதவுகிறது. உங்கள் வழக்கமான வருமானத்துடன், ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை நீங்கள் டெபாசிட் செய்யலாம்.

நீங்கள் தீர்மானிக்கும் தொகை ஒவ்வொரு மாதமும் உங்கள் சேமிப்புக் கணக்கிலிருந்து கழிக்கப்படும். இந்த சிறப்புத் திட்டத்தில், வாடிக்கையாளர்கள் வழக்கமான சேமிப்பின் (Savings) பலனைப் பெறுவதோடு, கூடுதலாக, 5 லட்சம் ரூபாய் சிறப்பு வசதியையும் பெறுகிறார்கள்.

ALSO READ: ஜாக்கிரதை! இந்த நிறுவனங்களின் கடன் உதவிகளை ஏற்க வேண்டாம்: எச்சரித்தது SBI

IDBI -யின் முறையான சேமிப்பு திட்டத்தின் சிறப்பம்சங்கள்

- எதிர்கால இலக்குகளுக்கான முன் திட்ட சேமிப்பு
- ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு திடமான சேமிப்பு
- 1 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை வைப்பு வசதி
- 100 ரூபாய் டெபாசிட்டுடன் தொடங்கலாம்.
- எஸ்எஸ்பி + பிரின்சிபல் தொகை + வரி பாதுகாப்புடன் காம்பிளிமெண்டரி காப்பீட்டுத் தொகை பாதுகாப்பு மற்றும் வெகுமதி புள்ளிகளுடன் முறையான சேமிப்பை உறுதி செய்கிறது. 

காம்பிளமெண்டரி 5 லட்சம் ரூபாய் வரை தனிப்பட்ட விபத்து காப்பீடு 

- குறைந்தபட்ச தகுதி தவணைத் தொகை - ரூ .5000 மற்றும் ரூ .100-ன் மடங்குகளில் இருக்கும்
- குறைந்தபட்ச தகுதி காலம் - 3 ஆண்டுகள் மற்றும் முடிவடையும் காலாண்டு, அதிகபட்சம் - 10 ஆண்டுகள்
- தனிநபர்கள் அல்லது HUF-கள் இந்த கணக்கைத் திறக்கலாம்.
- இந்த முறையான சேமிப்பு திட்டத்திற்கு விண்ணப்பிப்பது முற்றிலும் எளிதானதாகும். 
- நெட் பேங்கிங் (Net Banking) / கோ மொபைல் + ஆப் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 
- அருகிலுள்ள வங்கியின் கிளைக்கும் சென்று தேவையான விவரங்களைப் பெறலாம்.

ALSO READ: ஒரே ஒரு video call மூலம் savings account-ஐத் திறக்கலாம்: IDBI வங்கியின் video KYC

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News