அகவிலைப்படி உயர்வின் சமீபத்திய செய்திகள்: மத்திய ஊழியர்களுக்கு நிதியமைச்சகம் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வழங்கியுள்ளது. அதன்படி நீண்ட நாட்களாக மத்திய ஊழியர்கள் காத்திருந்த அந்த தருணம் வந்துவிட்டது. அந்த வகையில் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படிக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இனி ஊழியர்களின் சம்பளத்தில் புதிய அகவிலைப்படி சேர்க்கப்படும். அகவிலைப்படி திருத்தப்பட்ட அறிவிப்பை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த முறை மோடி அரசு சார்பில் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 42% ஆக அதிகரித்துள்ளது.
38ல் இருந்து 42 சதவீதமாக அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் அகவிலைப்படியை 4% உயர்த்துவதற்கான அலுவலக குறிப்பாணையை நிதி அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது. முன்னதாக மார்ச் 24 அன்று, ஊழியர்களின் அகவிலைப்படி குறித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருந்தது. இதனுடன், ஊழியர்களின் அகவிலைப்படி 38ல் இருந்து 42 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான அறிவிப்பை நிதி அமைச்சகம் ஏப்ரல் 3 ஆம் தேதி வெளியிட்டது.
மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி, அரசு வெளியிட்ட புதிய தகவல்
மூன்று மாத நிலுவைத் தொகையும் கிடைக்கும்
இதற்கிடையில் இந்த அறிவிப்புக்குப் பிறகு, மத்திய ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட நான்கு சதவீத அகவிலைப்படி ஏப்ரல் மாத சம்பளத்தில் வழங்கப்படும். அதேபோல் இந்த ஏப்ரல் மாத சம்பளத்தில், மூன்று மாத நிலுவைத் தொகையுடன் புதிய சம்பளம் ஊழியர்களுக்கு வழங்கப்படும். மேலும் மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஜனவரி 1, 2023 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. சுமார் ஒரு கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி முதல் மார்ச் வரை நிலுவைத் தொகை வழங்கப்படும், இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.12,815 கோடி சுமை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓய்வூதியர்களுக்கும் ஜாக்பாட்
இதனிடையே ஏழாவது ஊதியக் குழுவின் கீழ் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் அகவிலை நிவாரணத்தின் பலனையும் பெற்றுள்ளனர். அதன்படி அகவிலைப்படியுடன், அகவிலை நிவாரணத்தையும் 4 சதவீதமாக அமைச்சரவை உயர்த்தியது. இதன் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 42% அகவிலை நிவாரணம் வழங்கப்படும். ஓய்வூதியர்களின் ஓய்வூதியத்துடன் மூன்று மாத நிலுவைத் தொகையும் வழங்கப்படும்.
மேலும் படிக்க | ஆதார் - பான் இல்லாமல் நீங்கள் இனி பணத்தை சேமிக்க முடியாது: மத்திய அரசு அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ