Budget 2024: நாட்டின் பொது பட்ஜெட்டுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மோடி அரசின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின் கடைசி பட்ஜெட்டாக இது இருக்கும். இந்த ஆண்டு தேர்தல் நடக்கவுள்ளதால் இது ஒரு இடைக்கால பட்ஜெட்டாகத்தான் (Interim Budget) இருக்கும். எனினும், வாக்காளர்க்களை கவரும் வகையில், அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அனைத்து துறையினருக்கும் தங்களுக்கான வலுவான அறிவிப்புகள் அரும் என்ற எதிர்பார்ப்புகளும் உள்ளன. நிதி அமைச்சர் நிர்மலா சிதாராமன் (Nirmala Sitharaman) பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.
பட்ஜெட் 2024 எதிர்பார்ப்புகள் (Budget 2024 Expectations)
இந்த முறை தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்டில் உயர்கல்வித் துறை அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளது. கல்வி (Education)சார்ந்த ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு அதிக பட்ஜெட் ஒதுக்கீடு, மாணவர்களின் கடனுக்கான வட்டி விகிதங்கள் (Interest Rates) குறைப்பு, பல்கலைக்கழகங்களின் வரிச்சுமை குறைப்பு என உயர்கல்வி நிறுவனங்கள் பல கோரிக்கைகளை விடுத்துள்ளன.
2023-24 பட்ஜெட்டில் கல்விக்கு நிதியமைச்சர் முக்கியத்துவம் அளித்துள்ளார். 2022-23 நிதியாண்டிற்கான பட்ஜெட் மதிப்பீட்டை விட ரூ.8,621 கோடி அதிகமாக ரூ.1.12 லட்சம் கோடி செலவழிக்க அப்போது முன்மொழியப்பட்டது. 2023-24 நிதியாண்டில் உயர்கல்வித் துறைக்கு ரூ.44,094 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2022-23 பட்ஜெட் மதிப்பீட்டை விட 7.9% குறைவு (ரூ. 40,828 கோடி).
மேலும் படிக்க | 48 லட்சம் ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் ஜாக்பாட்... DA ஹைக், டபுள் சம்பளம்
இருப்பினும், இந்த ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என்று நிறுவனங்கள் நம்புகின்றன. சாரதா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் ஷிவ்ராம் காரா, "உயர்கல்விக்கான பட்ஜெட்டில் (குறிப்பாக தனியார் நிறுவனங்களுக்கு) 10 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்." என்றார். குருகிராமை தளமாகக் கொண்ட நிறுவனமான கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்டின் இயக்குநரும் பேராசிரியருமான வி.பி.சிங்கும் இதே கருத்தைக் கொண்டிருந்தார். 'கடந்த ஆண்டு கல்வித் துறைக்கான பட்ஜெட் (Education Budget) 8% அதிகரித்தது. ஆனால் இந்த ஆண்டு ஒதுக்கீடு குறைந்தது 20% அதிகரிக்க வேண்டும்' என்று அவர் தெரிவித்துள்ளார்.
கல்வியாளர்கள் சுயநிதி தன்னாட்சி நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க விரும்புகிறார்கள்
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) ஒப்புதல் அளித்துள்ள, சொந்த நிதியுதவி கொண்டுள்ள தன்னாட்சி நிறுவனங்களுக்கு அரசு நிதியில் அதிக பங்கு என கல்வியாளர்கள் விரும்புகிறார்கள். உயர் கல்வித் துறை மற்றும் அதன் கட்டுப்பாட்டாளர்கள் நிச்சயமாக அனைத்து பிரீமியம் நிறுவனங்களுக்கும் நிதி வழங்குகிறார்கள். இருப்பினும், கல்விக்கான நிலைக்குழு 2022 இல் மாணவர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி உயர்கல்விக்கான செலவுகளை ஈடுகட்ட போதுமானதாக இல்லை என்று கண்டறிந்தது.
ஏபிபிஎஸ் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் இயக்குனர் டாக்டர் மதுமிதா சாட்டர்ஜி, 'இதை மனதில் வைத்து, ஏஐசிடிஇ அங்கீகரிக்கப்பட்ட மற்றும் சுயநிதி தன்னாட்சி நிறுவனங்களுக்கு அரசு சிறப்பு நிதியை அறிவிக்கும் என நம்புகிறோம்.' என்றார்.
Union Budget 2024: வரிச்சுமை குறையுமா?
கல்வித்துறையின் சேவைகள் மற்றும் பொருட்கள் 18 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியின் (GST) வரம்பில் வருகின்றன. கே.எல் டீம்ட் பல்கலைக்கழகத்தின் வேந்தர் கே. சத்தியநாராயணா, 'உயர்கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கான வரிச்சுமையை (Tax Burden), 18 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்க வேண்டும்,' என்றார். இது பற்றி அவர் கூறுகையில், பயிற்சித் திட்டங்கள், முகாம்கள், யோகா நிகழ்ச்சிகள் மற்றும் பிற செயல்பாடுகளுக்கும் வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். கூடுதலாக, மஹிந்திரா பல்கலைக்கழகம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை கோரியுள்ளது.
மாணவர்களுக்கான கல்விக்கடன் (Education Loan)
மாணவர் கடன் (Student Loan) உயர் கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் (GER) தற்போது 27.3 சதவீதமாக உள்ளது. 2023ல் உயர்கல்வியில் (Higher Education) சேர்வோர் எண்ணிக்கை 4.14 கோடியாக உயர்ந்தது. இது முதல் முறையாக 4 கோடியை தாண்டியது. இது 2019-20ஐ விட 7.15% அதிகமாகவும். இந்த எண்ணிக்கை 2014-15ஐ விட 21% அதிகமாகவும் உள்ளது. இருப்பினும், மத்திய அரசு (Central Governmeny) 2030 வரை GERஐ 50% ஆகக் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. இதில், மலிவு விலையில் கல்விக் கடன் (Cheap Loans) வசதி மிகவும் உதவிகரமாக இருக்கும். தற்போது, வங்கிகள் (Banks) மற்றும் நிதிச் சேவை நிறுவனங்கள் வழங்கும் மாணவர் கடன்களுக்கான வட்டி விகிதம் 7% முதல் 18% வரை உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ