புதிய வரி விதிப்பிலிருந்து பழைய வரி விதிப்புக்கு மாற முடியுமா? இதனால் என்ன லாபம்?

Income Tax Regime: ஆனால் 2023 இல் நீங்கள் தவறுதலாக ITR ஐ புதிய வரி முறையில் தாக்கல் செய்திருந்து, வரி விலக்கு போன்றவற்றைப் பெற முடியவில்லை என்றால், இந்த ஆண்டு உங்கள் முன் உள்ள ஆப்ஷன்கள் என்ன? 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 26, 2023, 05:14 PM IST
  • புதிய வரி விதிப்பில் நீங்கள் தாக்கல் செய்திருந்தால் என்ன நடக்கும்?
  • வரி முறைகளை மாற்ற முடியுமா?
  • இதற்கான விதிகள் என்ன?
புதிய வரி விதிப்பிலிருந்து பழைய வரி விதிப்புக்கு மாற முடியுமா? இதனால் என்ன லாபம்? title=

Income Tax Regime: வரி திட்டமிடலுக்கான நேரம் தொடங்கியுள்ளது. வரிச் சேமிப்புக்கான முதலீட்டுச் சான்றுகளை விரைவில் வழங்க வேண்டும். வரி கணக்கீட்டின் பார்வையில், தங்களுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படும் என்பதை அனைவரும் கவனிக்க வேண்டும். முன்கூட்டியே வரி திட்டமிடல் செய்வதன் மூலம் அடுத்த ஆண்டுக்கான வரியைச் சேமிக்கலாம். ஆனால் புதிய வரி விதிப்பு முறையில் உங்களுக்கு பெரும்பாலான வரி விலக்குகள் கிடைக்காது. நீங்கள் சில குறிப்பிட்ட வரி விலக்குகளைப் பெற விரும்பினால், பழைய வரி முறையில்தான் வருமான வரிக் கணக்கை (ITR Filing) தாக்கல் செய்ய வேண்டும்.

புதிய வரி விதிப்பில் நீங்கள் தாக்கல் செய்திருந்தால் என்ன நடக்கும்?

ஆனால் 2023 இல் நீங்கள் தவறுதலாக ITR ஐ புதிய வரி முறையில் தாக்கல் செய்திருந்து, வரி விலக்கு போன்றவற்றைப் பெற முடியவில்லை என்றால், இந்த ஆண்டு உங்கள் முன் உள்ள ஆப்ஷன்கள் என்ன? பழைய வரி விதிப்பில் (Old Tax Regime) வரி விலக்கு பெற இப்போது உங்களுக்கு சுதந்திரம் உள்ளதா? ஆம், சென்ற ஆண்டு புதிய வரி விதிப்பின் கீழ் நீங்கள் ஐடிஆர் (ITR) தாக்கல் செய்திருந்தாலும், தற்போது வரி விலக்கு பெற உங்களுக்கு இன்னும் வழி உள்ளது. இதற்கு நீங்கள் வரி முறையை மாற்ற வேண்டும்.

வரி முறைகளை மாற்ற முடியுமா?

ஆம், நீங்கள் சம்பளம் பெறும் நிபுணராக இருந்தால், உங்கள் வரி (Income Tax) முறையை மாற்றலாம். இந்த முறை வரி விதிப்பு முறையும் இயல்புநிலை முறையாக மாற்றப்பட்டது, இதன் காரணமாக வரி செலுத்துவோர் தங்கள் வரி முறையைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பமடைந்தனர். மேலும் புதிய வரி விதிப்பு முறையை (New Tax Regime) கொண்டு வந்த பிறகு, மீண்டும் மீண்டும் வரி விதிப்பை மாற்ற முடியுமா என்ற குழப்பம் பலரிடம் நிலவுகிறது. 

மேலும் படிக்க | Year Ender 2023: விலைவாசி முதல் வேலை வாய்ப்பு வரை... சாமானியர்களுக்கு 2023 எப்படி இருந்தது..!!

இது குறித்து, மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) ஏப்ரல் 13, 2020 அன்று ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது, அதில் ‘வணிக வருமானம்’ உள்ளவர்கள் அதாவது வணிகத்திலிருந்து வருமானம் பெறும் வரி செலுத்துவோர் இந்த விருப்பத்தை ஒரு முறை பெறுவார்கள் என்று கூறப்பட்டது. இதன் மூலம் அவர்கள் வரி விதிப்பை மாற்றிக்கொள்ளலாம். அதாவது வணிகத்தின் மூலம் வருமானம் ஈட்டாதவர்கள் வரி முறையை மாற்றுவதற்கான விருப்பம் தொடர்ந்து உள்ளது. அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் வரி முறையை மாற்ற வாய்ப்பு கிடைக்கும்.

இதற்கான விதிகள் என்ன?

புதிய வரி விதிப்பு முறையின் மூலம், வணிக வருமானம் உள்ளவர்கள் ஒரு முறை மட்டுமே வரி முறையை மாற்றும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்ற விதி உள்ளது. ஒவ்வொரு புதிய நிதியாண்டிலும் வரி விதிப்பை அவர்களால் மாற்ற முடியாது. ஆனால் அதற்கு மாறாக, சம்பளம் பெறும் தொழில் வல்லுநர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் ஒவ்வொரு நிதியாண்டிலும் தங்கள் வரி விதிப்பை மாற்றுவதற்கான விருப்பம் உள்ளது.

அதாவது, நீங்கள் மாத சம்பளம் அல்லது ஓய்வூதியம் பெறும் நபராக இருந்து, கடந்த ஆண்டு புதிய வரி முறையில் வரி செலுத்தியிருந்தால், இந்த ஆண்டு உங்கள் வசதிக்கேற்ப பழைய வரி முறையைத் தேர்வு செய்யலாம். அதன் பிறகு, அடுத்த ஆண்டு புதிய வரி முறையைத் தேர்ந்தெடுக்க உங்களுக்கு விருப்பம் இருக்கும். அதாவது ஒவ்வொரு வருடமும் உங்கள் வரி விதியை ( New Vs Old Tax regime) மாற்றலாம். இதை செய்ய, இந்த ஆண்டு எந்த வரி முறையின் கீழ் நீங்கள் வரி தாக்கல் செய்வீர்கள் என்பதை முதலில் உங்கள் நிறுவனத்திற்குச் சொல்ல வேண்டும்.

மேலும் படிக்க | கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்திற்கு வரி விலக்கு பெறலாம்.. இதை மட்டும் செய்தால் போதும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News