கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஜூலை 1 முதல் ஆன்லைன் வணிகர்கள் வாடிக்கையாளர்களது கார்டுகளின் டேட்டாக்களை சேமிக்க முடியாது. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, இந்த கார்டு டோக்கனைசேஷன் விதிகள் ஜூலை 1, 2022 முதல் அமலுக்கு வர இருக்கிறது. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கடந்த ஆண்டு டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு டோக்கனைசேஷன் விதிகளை வெளியிட்டது.
புதிய விதிகளின் ஒரு பகுதியாக, வணிகர்கள் தங்கள் சேவையகங்களில் வாடிக்கையாளர்களது கார்டுகளின் டேட்டாக்களை சேமிக்க தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் உள்நாட்டு ஆன்லைன் கொள்முதல்களுக்கு மத்திய வங்கி கார்டு-ஆன்-ஃபைல் டோக்கன்களை கட்டாயமாக்கியது. கார்டு டோக்கன்களை ஏற்றுக்கொள்வதற்கான காலக்கெடு ஜனவரி 1, 2022 முதல் ஜூலை 1, 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பாகச் செய்ய உதவும் வகையில் கார்டு டோக்கன்கள் என்க்ரிப்ட் செய்யப்பட்டு “டோக்கன்” ஆகச் சேமிக்கப்படும். மேலும், இந்த டோக்கன்கள் வாடிக்கையாளரின் எந்த விவரங்களையும் வெளியிடாமல் பணம் செலுத்த அனுமதிக்கும்.
ரிசர்வ் வங்கி அதன் வழிகாட்டுதல்களில் அசல் கார்டுகளின் டேட்டாக்களை என்க்ரிப்ட் செய்யப்பட்ட டிஜிட்டல் டோக்கனுடன் மாற்றுவதை கட்டாயமாக்கியுள்ளது. இப்போது ஜூலை 1, 2022 முதல், ஆன்லைன் வணிகர்கள் வாடிக்கையாளர்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் டேட்டாக்களை அவர்களின் பதிவுகளில் இருந்து நீக்க வேண்டும். டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு டோக்கனைசேஷன் சிஸ்டம் முற்றிலும் இலவசம் மற்றும் ஒருவரின் கார்டின் டேட்டாவைப் பாதுகாக்கும் போது வாடிக்கையாளர்களுக்கு சுமூகமான கட்டண அனுபவத்தை வழங்குகிறது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ITR: வருமான வரி தாக்கல் செய்ய தேவையான ஆவணங்களின் முழு விபரம் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR