ABC Juice குடித்தால் கிடைக்கும் முத்தான பத்து நன்மைகள்: கண்டிப்பா குடிங்க

Health Benefits of ABC Juice: ஏபிசி ஜூஸ் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குவதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் உட்கொள்ளப்படுகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 5, 2024, 09:41 AM IST
  • ஆப்பிள்களில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன.
  • பீட்ரூட்கள் அத்தியாவசிய நைட்ரேட்டுகள் மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகளை வழங்குகின்றன.
  • கேரட் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ -வின் ஆரோக்கியமான அளவை வழங்குகின்றன.
ABC Juice குடித்தால் கிடைக்கும் முத்தான பத்து நன்மைகள்: கண்டிப்பா குடிங்க title=

Health Benefits of ABC Juice: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடலில் உள்ள பிரச்சனைகளுக்கு நிவாரணம் காணவும் மக்கள் தற்போது அதிகமாக இயற்கையான தீர்வுகளை நாடத் தொடங்கியுள்ளனர். மூலிகைகள், பழச்சாறுகள், காய்கள், பழங்கள் என இவற்றின் முக்கியத்துவம் தற்போது மக்களுக்கு அதிகமாகப் புரியத் தொடங்கியுள்ளது. அப்படி பல வித ஆரோக்கிய நன்மைகள் அடங்கிய ஒரு கலவைதான் ஏபிசி ஜூஸ் என்றழைக்கப்படும் ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் ஆகியவற்றின் சாறு.

இதன் குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகளுக்காக இது பிரபலமடைந்துள்ளது. புத்துணர்ச்சியூட்டும் சுவை மற்றும் அதிகமான ஊட்டச்சத்துகளுக்கு பெயர் பெற்ற இந்த கலவையானது அதில் பயன்படுத்தப்படும் மூன்று சக்திவாய்ந்த பொருட்களின் சக்தியைப் முற்றிலுமாக பயன்படுத்துகிறது. 

- இனிப்பு சுவை கொண்ட ஆப்பிள்களில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன.
- பீட்ரூட்கள் அத்தியாவசிய நைட்ரேட்டுகள் மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகளை வழங்குகின்றன.
- கேரட் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ -வின் ஆரோக்கியமான அளவை வழங்குகின்றன.

ஏபிசி ஜூஸ் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குவதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் உட்கொள்ளப்படுகின்றது.

ABC Juice: இதன் நன்மைகள் பற்றி இங்கே காணலாம்:

நோய் எதிர்ப்பு சக்தி: ஏபிசி ஜூஸில் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளின் கலவை உடலுக்கு தேவையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. உடல் நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

செரிமானம்: ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து மற்றும் பீட்ரூட்டின் செரிமான பண்புகள் ஆரோக்கியமான செரிமானத்தை ஆதரிக்கின்றன. வழக்கமான குடல் இயக்கம் மற்றும் ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்திற்கு இந்த சாறு உதவுகிறது.

சத்து நிறைந்தது: ஏபிசி ஜூஸ் குடிப்பதன் மூலம் கேரட்டில் இருந்து வைட்டமின் ஏ, வைட்டமின் ஏ, சி, ஆப்பிள்களில் இருந்து பொட்டாசியம் மற்றும் பீட்ரூட்டில் இருந்து ஃபோலேட் உள்ளிட்ட அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நமக்கு கிடைக்கின்றன. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது.

எடை இழப்பு: குறைந்த கலோரிகள் மற்றும் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ள ஏபிசி ஜூஸ் எடை இழப்புக்கு உதவும். இது பசியைக் கட்டுப்படுத்தி நாள் முழுவதும் நிறைவான உணர்வை தரும். 

இதய ஆரோக்கியம்: பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளன. அவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.

மேலும் படிக்க | இந்த 5 அறிகுறிகள் இருக்கிறதா? உடலில் யூரிக் அமிலம் அதிகரித்து இருக்கலாம்!

நச்சு நீக்கம்: பீட்ரூட்டின் இயற்கையான பண்புகள் மற்றும் கேரட் மற்றும் ஆப்பிளில் உள்ள நீர்ச்சத்து காரணமாக ஏபிசி ஜூஸ் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகின்றது.

மூளை ஆரோக்கியம்: ஏபிசி சாற்றின் ஊட்டச்சத்துகள் நமது மூளையின் செயல்பாட்டில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். பீட்ரூட்டில் நைட்ரேட் உள்ளது. இது மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.

சரும பாதுகாப்பு: ஏபிசி ஜூஸில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பொலிவை கூட்டி, வயதான அறிகுறிகளைக் குறைக்க உதவுகின்றன.

கண் ஆரோக்கியம்: கேரட்டில் அதிக அளவில் பீட்டா கரோட்டின் உள்ளது. இது கண் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். 

ஆற்றல்: ஆப்பிளில் உள்ள இயற்கையான சர்க்கரை மற்றும் கேரட் மற்றும் பீட்ரூட்டில் உள்ள வைட்டமின்கள் உடலில் ஆற்றலை அதிகரித்து நாள் முழுதும் உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்கின்றன.

Side Effects of ABC Juice

ஏபிசி ஜூஸ் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கினாலும், இதை அதிகப்படியாக உட்கொண்டால், சில பக்க விளைவுகளும் ஏற்படக்கூடும். இதனால் சிலருக்கு வாயுத்தொல்லை அல்லது உப்பசம் போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால் சிலருக்கு ஒவ்வாமையும் ஏற்படக்கூடும். நீரிழிவு நோயாளிகள் இந்த ஜூஸை அருந்தும்போது இரத்த சர்க்கரை அளவைக் கண்காணிக்க வேண்டியது மிக அவசியமாகும். பீட்ரூட்டில் உள்ள அதிக ஆக்சலேட் அளவுகளால், இதை அதிக அளவில் உட்கொண்டால் சிறுநீரக கல் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கலாம். இந்த ஜூசை உட்கொள்ளத் தொடங்கும் முன் உங்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று பிறகு இதை தொடங்குவது நல்லது. 

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தோப்புக் கரணம் : ஒரே பயிற்சி... ஓஹோ நன்மைகள் - சிம்பிள் தான் ஆனால் கஷ்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News