Relationship Tips In Tamil: முன்பெல்லாம் பெற்றோர்கள் பார்த்துவைக்கும் திருமணம்தான் அதிகம் நடக்கும். ஆனால், டிரெண்ட் தற்போது லவ் மேரேஜ் ஆக உள்ளது. சாதி மறுப்பு திருமணம், மாற்று மதம் திருமணம் உள்ளிட்ட பழக்கவழக்கம் தற்போது அதிகரிப்பது சற்று ஆரோக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
ஆனால், காதல் திருமணமும் தற்போது அதிக விவாகரத்தை சந்திக்கின்றன. காரணம், ஆண் - பெண் உறவு மேலும் சிக்கலுக்கு உரியதாக மாறிவிட்டது. பல ஆண்டுகளாக பழகிய ஜோடிகளே, திருமண வாழ்க்கையை தொடங்கிய பின்னர் அதில் சிரமங்களை அனுபவிக்கின்றனர். அதில் இருந்து வெளியே மீண்டு வர வேண்டும் என நினைக்கின்றனர்.
குடும்பம் கொடுக்கும் அழுத்தம், எதிர்பார்ப்புகள், பரஸ்பர ஒருங்கிணைப்பு ஆகியவை இல்லாத காரணத்தினால் அதிகம் விவகாரத்து நடப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில், திருமண உறவில் சிக்கலை சந்திக்கும் தம்பதிகள் இந்த 5 விதிகளை மறக்காமல் பின்பற்றும்பட்சத்தில், விவாகரத்து அச்சம் இன்றி திருமண வாழ்க்கையை மகிழ்ச்சி உடனும், நிறைவாகவும் வாழலாம்.
மேலும் படிக்க | விதவிதமாக லவ் பண்ண சொல்லித்தரும் 8 காதல் புத்தகங்கள்!!
இந்த 5 விதிகளை மறக்காதீங்க
ஸ்பேஸ் கொடுங்க: திருமண உறவில் ஒவ்வொருவருக்கும் தனியுரிமையை கொடுக்க வேண்டும். எந்நேரத்திலும் ஒருவர் சுதந்திரமாக இருக்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அதற்காக பிரிந்திருக்க வேண்டுமா என கேட்காதீர்கள், அவர்களுக்கும் கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்தால்தான் உங்களின் திருமண உறவு வலுவாக இருக்கும். அதாவது, தான் செய்யும் வேலைகளிலும், எடுக்கும் முடிவுகளிலும் சுதந்திரமாக செயல்பட்டால்தான் அவர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.
நேரம் செலவிடுங்க: அடியும் பிடியுமான இந்த காலகட்டத்தில் தம்பதியர் தங்களுக்குள் செலவழிக்கும் நேரம் குறைந்தவிட்டதன் காரணத்தால் பெரிய பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, உங்கள் பார்ட்னர் உடன் அதிக நேரம் செலவிடுங்கள். டின்னருக்கு அழைத்துச் செல்லுங்கள், படத்திற்கு போங்கள், இருவருக்கும் மன நிறைவு அளிக்கும் இடத்திற்கு செல்லுங்கள்.
மரியாதை கொடுங்க: திருமண உறவில் மரியாதை மிக முக்கியமானது. உங்கள் பார்ட்னரின் முடிவை, உணர்வுகளை, எண்ணங்களை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். இதை செய்தாலே உங்கள் மீது நம்பிக்கை ஏற்படும், நல்லுறவும் ஏற்படும்.
கொண்டாடுங்க: சிறு சிறு சந்தோஷமான தருணங்களையும் கொண்டாடுங்கள். உங்களின் வெற்றி, அவர்களின் வெற்றி என அனைத்தையும் கொண்டாடும்போது வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்லும்.
நல்லா பேசுங்க: அதேபோல், அனைத்து நேரங்களிலும் மனம்விட்டு பேசுங்கள். இதுதான் திருமண உறவில் மிக மிக முக்கியமான ஒன்றாகும். உங்கள் எண்ணத்தை, சிந்தனையை, தேவையை இணையரிடம் கலந்தாலோசியுங்கள். பேசினால் கருத்து முரண்பாடுகள் குறைந்துவிடும்.
திருமண உறவில் ஆயிரம் பிரச்னைகள் வந்தாலும் அவற்றை தீர்க்கும் மன தைரியமும், நேர்மறையான சிந்தனையும் தேவை. நேர்மறை சிந்தனை உங்களை விவாகரத்து எண்ணத்தில் இருந்து மீளச்செய்து திருமண உறவின் மீது கவனம் குவிக்க உதவும். இந்த விதிகளை பின்பற்றாவிட்டால் நீங்கள் 10 வருடங்களாக காதலித்து திருமணம் செய்தால் கூட இருவருக்கும் இடையே பிரச்னை வர வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க | லிவ் இன் உறவில் இருக்கும் நன்மை, தீமைகள் - இளசுகளே கொஞ்சம் யோசித்து முடிவெடுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ