நாட்டில் UPI மூலம் பரிவர்த்தனை செய்பவர்களின் எண்ணிக்கை கோடிகளை எட்டியுள்ளது. தற்போதைய காலத்தில் நாம் பணம் அனுப்புவதற்கு வங்கிகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாம் வீட்டில் இருந்தபடியே கையில் இருக்கும் மொபைல் மூலம் பணத்தை அனுப்பிக் கொள்ளலாம். அதோடு, ஷாப்பிங் செய்ய போகும் போதும், ரொக்க பணம் எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை, தெருவோர பெட்டி கடை, காய்கறிகாரர், பூ விற்பனை செய்பவர் முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை உங்கள் ஸ்மார்போனில் யுபிஐ செயலி இருந்தாலே போதும்.
இந்நிலையில். UPI பயன்பாடு பிரபலமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, சமீபத்திய காலங்களில் பல பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் UPI ஐப் பயன்படுத்துபவர் என்றால், புதிய விதிகளை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். யூனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸில் (யுபிஐ) செய்யப்பட்டுள்ள அந்த 5 புதிய மாற்றங்களை அறிந்து கொள்ளலாம்
1) UPI கட்டண வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதன் விபரம்
மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு UPI மூலம் கட்டணம் செலுத்தும் வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் கல்வி தொடர்பான கட்டணங்களுக்கான பரிவர்த்தனை வரம்பு ₹ 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, இனி மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் ஆகிய இடங்களில் UPI பயனர்கள் ஒரே நேரத்தில் ரூ.5 லட்சம் வரை யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம். யுபிஐ மூலம் 5 லட்சம் வரை ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதி ஜனவரி 10, 2024, NPCI ஆல் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த மாதம் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India), மருத்துவமனை மற்றும் கல்வி சேவைகளுக்கு ஒரே நேரத்தில் UPI மூலம் ரூ.5 லட்சம் வரை செலுத்தலாம் என உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
2) UPI இல் முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் வசதி
UPI பயனர்கள் இப்போது முன்-அங்கீகரிக்கப்பட்ட கடன் வசதியின் பலனைப் பெறத் தொடங்கியுள்ளனர். அதாவது வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் பணம் செலுத்த முடியும். முன்-அங்கீகரிக்கப்பட்ட கடன் வசதி மூலம் தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு கடன் வசதி எளிதாகியுள்ளது.
மேலும் படிக்க | நீங்கள் வாங்குவது செகண்ட் ஹேண்ட் ஸ்மார்ட்போனா? இல்லை திருடியதா? கண்டுபிடிக்க ஐடியா!
3) நான்கு மணிநேர கூலிங் பீரியட்
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), புதிய யுபிஐ பயன்ர்கள் ரூ.2,000க்கு மேல் முதல் பணம் செலுத்துவதற்கு நான்கு மணிநேர கூலிங் பீரியட் காலத்தை முன்மொழிந்துள்ளது. நீங்கள் முதல்முறை பணம் அனுப்பிய 4 மணி நேரத்திற்கு பிறகே கூடுதல் தொகை அனுப்ப முடியும் என்ற புதிய கட்டுப்பாடுகளுடன் வரவுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
4) QR குறியீடு கொண்ட UPI ஏடிஎம்கள்
ரிசர்வ் வங்கியானது ஜப்பானின் ஹிட்டாச்சி நிறுவனத்துடன் இணைந்து நாடு முழுவதும் UPI ATM -களை திறக்க உள்ளது. QR குறியீடுகளைப் பயன்படுத்தும் UPI ATMகள், தற்போது சோதனை கட்டத்தில் உள்ளன. இது வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட பிறகு, டெபிட் கார்டை எடுத்துச் செல்லாமல் பணம் எடுக்கும் வசதி இருக்கும்.
5) கணக்குகள் நீக்கம்
கடந்த ஒரு வருடமாக யுபிஐ பரிவர்த்தனையை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு UPI ID நீக்கப்படும். அதே போல, செயல்பாட்டில் இல்லாத மொபைல் எண்களுடன் தொடர்புடைய யுபிஐ ஐடி (UPI ID) நீக்கப்படும். டிஜிட்டல் முறையில் நடத்தப்படும் பரிவர்த்தனைகளை பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் UPI பேமெண்ட்களின் மதிப்பு 100 பில்லியனைத் தாண்டியுள்ளது. இந்த ஆண்டு முழுவதும், ரூ.118 பில்லியன் மதிப்பிலான தொகை UPI கட்டணமாக செலுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இதில் 60 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஜியோ, ஏர்டெல் யூஸ் பண்றீங்களா? இனி தாறுமாறாக அதிகரிக்கப்போகுது ரீசார்ஜ் கட்டணம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ