நிலையான வைப்புத் திட்டம்: பல வங்கிகள் 30 ஜூன் 2024 வரை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு FD முதலீட்டு திட்டங்களை வழங்குகின்றன. இந்தியன் வங்கி, ஐடிபிஐ வங்கி மற்றும் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியின் சிறப்பு எஃப்டிகளுக்கு சுமார் 8 சதவீத வட்டி கிடைக்கும். நீங்களும் குறைந்த காலத்தில் அதிக வருமானத்தைப் பெற விரும்பினால், இந்த மாத இறுதிக்குள் இவற்றில் முதலீடு செய்யுங்கள்.
இந்தியன் வங்கியின் சிறப்பு எஃப்டி திட்டம் (Indian Bank Special Fixed Deposit)
இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு FD திட்டத்தை வழங்குகிறது. பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு 300 மற்றும் 400 நாட்களுக்கு FD திட்டங்களை வழங்குகிறது. இந்தியன் வங்கியின் இணையதளத்தில் உள்ள தகவலில், ஜூன் 30, 2024 வரை Ind Super 400 days மற்றும் Ind Supreme 300 days FD திட்டங்களில் முதலீடு செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Ind சூப்பர் 400 நாட்களுக்கான FD திட்டம் (Ind Super 400 days)
இந்தியன் வங்கியின் சிறப்பு FD என்பது முதிர்வு காலத்திற்கு முன்பே பணத்தை எடுக்கும் வசதி கொண்ட FD முதலீட்டு திட்டம் ஆகும். Callable FD என்பது இதில் நீங்கள் முதிர்வு முன்பே பணம் எடுக்கும் விருப்பம் கிடைக்கும். இந்தியன் வங்கியின் Ind Super FD 400 நாட்களுக்கான திட்டத்தில் ரூ.10,000 முதல் ரூ.2 கோடி வரை முதலீடு செய்யலாம். இந்தியன் வங்கி இதற்கு பொது மக்களுக்கு 7.25%, மூத்த குடிமக்களுக்கு 7.75% மற்றும் சூப்பர் மூத்த குடிமக்களுக்கு 8.00% வட்டி வழங்குகிறது.
Ind சூப்பர் 300 நாட்களுக்கான FD திட்டம் (Ind Super 300 days)
இந்தியன் வங்கியின் சிறப்பு கால வைப்புத் திட்டமான Ind Super 300 days என்னும் திட்டம் ஜூலை 1, 2023 அன்று தொடங்கப்பட்டது. 300 நாட்களுக்கு இந்த FDயில் ரூ.5000 முதல் ரூ.2 கோடிக்கும் குறைவாக முதலீடு செய்யலாம். இதற்கு வங்கி 7.05 சதவீதம் முதல் 7.80 சதவீதம் வரை வட்டி தருகிறது. இந்தியன் வங்கி இந்த திட்டத்திற்கு பொது மக்களுக்கு 7.05%, மூத்த குடிமக்களுக்கு 7.55% மற்றும் சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 7.80% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
மேலும் படிக்க | FD முதலீட்டிலும் ரிஸ்க் உண்டு... எச்சரிக்கையாக இருங்க மக்களே..!!
ஐடிபிஐ வங்கியின் சிறப்பு நிலையான வைப்புத் திட்டம்
ஐடிபிஐ வங்கி தனது மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு நிலையான வைப்புத்தொகை திட்டங்களைவழங்குகிறது. ஐடிபிஐ வங்கி 300 நாட்கள், 375 நாட்கள் மற்றும் 444 நாட்களுக்கு சிறப்பு FD வழங்குகிறது. இந்த சிறப்புத் திட்டம் 30 ஜூன் 2024 வரை வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்.
IDBI உத்சவ் சிறப்பு 400 நாட்கள் FD திட்டம்
ஐடிபிஐ வங்கியின் இந்த திட்டத்தின் ஜூன் 30, 2024 வரை உத்சவ் எஃப்டி திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஐடிபிஐ வங்கி வழக்கமான வாடிக்கையாளர்கள், என்ஆர்ஐ மற்றும் என்ஆர்ஓ வாடிக்கையாளர்களுக்கு 444 நாட்கள் எஃப்டி முதலீடுகளுக்கு 7.25% வட்டியை வழங்குகிறது. முதலீட்டாளர்கள் இந்த FDயை முன்கூட்டியே திரும்பப் பெறவும் மூடவும் வங்கி அனுமதிக்கிறது.
IDBI உத்சவ் FD திட்டம் 375 நாட்கள்
ஐடிபிஐ வங்கி 375 நாட்கள் உத்சவ் எஃப்டியில் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு 7.60% வட்டியை வழங்குகிறது. அதே நேரத்தில், வழக்கமான வாடிக்கையாளர்கள், என்ஆர்ஐ மற்றும் என்ஆர்ஓ வாடிக்கையாளர்களுக்கு 375 நாட்களுக்கு எஃப்டியில் 7.10% வட்டி அளிக்கிறது.
IDBI உத்சவ் 300 நாட்கள் FD திட்டம்
ஐடிபிஐ வங்கி 300 நாட்கள் உத்சவ் எஃப்டியில் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு 7.55% வட்டியை வழங்குகிறது. அதே நேரத்தில், வழக்கமான வாடிக்கையாளர்கள், என்ஆர்ஐ மற்றும் என்ஆர்ஓ வாடிக்கையாளர்களுக்கு 300 நாட்களுக்கு எஃப்டிக்கு 7.05% வட்டி அளிக்கிறது.
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியின் சிறப்பு FD திட்டம்
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு 222 நாட்கள், 333 நாட்கள் மற்றும் 444 நாட்கள் சிறப்பு FDகளை வழங்குகிறது. இந்த சிறப்பு FDக்கு அதிகபட்சமாக 8.05 சதவீதம் வட்டி கிடைக்கும். 222 நாட்களுக்கான FD முதலீட்டிற்கு 7.05 சதவீத வட்டியையும், 333 நாட்களுக்கான FD முதலீட்டிற்கு 7.10 சதவீத வட்டியையும், 444 நாட்களுக்கான FD முதலீட்டிற்கு 7.25 சதவீத வட்டியையும் பெறலாம். சூப்பர் சீனியர் குடிமக்களுக்கு 444 நாட்கள் FD முதலீட்டிற்கு 8.05 சதவீத வட்டி கிடைக்கும்.
மேலும் படிக்க | FD முதலீடுகளுக்கு அதிக வட்டி வழங்கும் HDFC வங்கி... சான்ஸை மிஸ் பண்ணாதீங்க...!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ