PF பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம், வரம்பு அதிகரித்தது: மத்திய அரசு அதிரடி, PF உறுப்பினர்கள் ஹேப்பி

EPF Withdrawal: சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு இபிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் இபிஎஃப் கணக்கிலிருந்து (EPF Account) வித்ட்ரா செய்யும் தொகைக்கான வரம்பை ரூ.50,000-லிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தியுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 28, 2024, 10:15 AM IST
  • PF உறுப்பினரா நீங்கள்?
  • உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது.
  • விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
PF பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம், வரம்பு அதிகரித்தது: மத்திய அரசு அதிரடி, PF உறுப்பினர்கள் ஹேப்பி title=

EPF Withdrawal: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, அவ்வப்போது தனது செயல்பாடுகளில் பல மாற்றங்களையும், புதிய விதிகளையும் கொண்டு வருகின்றது. இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) அதிக நன்மைகளை அளிக்கவும் அவர்களது வசதிகளை மேம்படுத்தவும் இந்த மாற்றங்கள் கொண்டுவரப் படுகின்றன. அந்த வகையில் சமீபத்தில் மத்திய அரசு இபிஎஃப் உறுப்பினர்கள் பணம் எடுக்கும் வரம்பை ரூ.50,000-லிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு இபிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் இபிஎஃப் கணக்கிலிருந்து (EPF Account) வித்ட்ரா செய்யும் தொகைக்கான வரம்பை ரூ.50,000-லிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தியுள்ளது. இந்த மாற்றம் குறித்து மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்தார். பிஎஃப் சந்தாதாரர்கள், குடும்பத்தின் அவசரநிலை அல்லது பிற தேவைகளுக்காக இப்போது தங்கள் PF கணக்கிலிருந்து முன்பை விட அதிகமான பணத்தை எடுக்கலாம். இது பிஎஃப் உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக வந்துள்ளது. 

பல வித நடவடிக்கைகள் மூலம் இபிஃப் சந்தாதாரர்களுக்கு (EPF Subscribers) நிவாரணம் வழங்கும் அதே வேளையில், அரசாங்கம் சில விதிகளையும் தளர்த்தியுள்ளதாக மத்திய அமைச்சர் கூறினார். இதன்படி, புதிய வேலைக்குச் சேர்ந்த முதல் ஆறு மாதங்களுக்குள் பணியாளர் வேலையை விட்டு வெளியேறினாலும், அவர் பிஎஃப் கணக்கில் இருந்து பணம் எடுக்க அனுமதிக்கப்படுவார். இதற்கு முன்னர் பணம் எடுக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. எனினும், இப்போது PF உறுப்பினர்கள் முதல் ஆறு மாதங்களிலும் பணத்தை எடுக்க முடியும்.

'அது பணியாளர்களின் பணம். அவர்கள் தேவைப்படும் போது எளிதாக அதை எடுக்கும் வசதி அவர்களுக்கு இருக்க வேண்டும்' என அமைச்சர் கூறினார். பிஎப் தொடர்பான புதிய அப்டேட்கள் குறித்து சுட்டிக்காட்டிய மத்திய அமைச்சர் மாண்டவியா, 'கட்டாய வருங்கால வைப்பு நிதி பங்களிப்பிற்கான வருமான வரம்பை அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.' என்றார். EPFO தற்போது கணக்கில் இபிஎஃப் தொகையாக (EPF Amount) டெபாசிட் செய்யப்பட்ட பணத்திற்கு 8.25 சதவீத வட்டியை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி சர்ப்ரைசா? ஊதியம் எவ்வளவு உயரும்?

பிஎஃப் பணத்தை எடுப்பதற்கான செயல்முறை:

- மருத்துவ சிகிச்சை, கல்வி அல்லது குடும்பம் தொடர்பான அவசர சூழ்நிலைகளின் போது பிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுக்க ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அனுமதிக்கின்றது.

- EPFO ​​உறுப்பினர்கள் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இ-சேவைகள் போர்ட்டலுக்கு சென்று, தங்கள் UAN (யுனிவர்சல் கணக்கு எண்), கடவுச்சொல் மற்றும் கேப்ட்சாவைப் பயன்படுத்தி லாக் இன் செய்ய வேண்டும்.

- லாக் இன் செய்த பிறகு, 'ஆன்லைன் சேவைகள்' டேபுக்குச் சென்று, டிராப்டவுன் மெனுவிலிருந்து 'கிளைம் (படிவம்-31, 19, 10C மற்றும் 10D)' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

- தொடர்வதற்கு முன், பெயர், பிறந்த தேதி மற்றும் பிற தகவல்கள் போன்ற உங்களின் தனிப்பட்ட விவரங்களைச் சரிபார்க்கவும். உங்கள் ஆதார் இணைப்பு மற்றும் KYC விவரங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

- பகுதியளவு பணத்தை எடுக்க, படிவம் 31ஐத் தேர்ந்தெடுத்து, பட்டியலில் இருந்து பணம் எடுப்பதற்கான காரணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

- சப்மிட் செய்த பிறகு, உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் OTP வரும். க்ளெய்மை அங்கீகரிக்க இந்த OTP ஐ உள்ளிடவும்.

- இதை சப்மிட் செய்த பிறகு, 'ஆன்லைன் சேவைகள்' டேபில் உள்ள 'டிராக் க்ளைம் ஸ்டேட்டஸ்' விருப்பத்தின் கீழ் உங்கள் க்ளெய்ம் நிலையைக் கண்காணிக்கலாம்.

- பொதுவாக, க்ளெய்ம் செய்து 7-10 வேலை நாட்களில் உங்கள் பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்கிற்கு EPFO ​ நீங்கள் கோரிய பணத்தை அனுப்பும். 

மேலும் படிக்க | பண்டிகை காலத்தில் மோடி அரசு அளித்த பம்பர் பரிசு: குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கப்பட்டது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News