EPFO விடுத்த மாபெரும் எச்சரிக்கை: கவனமாக இல்லையெனில் கடும் பாதிப்பு

EPFO Alert News: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மூலம் பிஎஃப் பிடித்தம் செய்யப்படும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இபிஎஃப்ஓ-வின் பெயரில் பல மோசடிகள் வெளி வந்ததை அடுத்து, கடந்த சில நாட்களாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 13, 2022, 01:22 PM IST
  • இபிஎஃப்ஓ விடுத்த எச்சரிக்கை.
  • இபிஎஃப்ஓ தனிப்பட்ட தகவல்களைக் கேட்பதில்லை.
  • முதலாளியின் பங்கு இரண்டு பகுதிகளாக டெபாசிட் செய்யப்படுகிறது.
EPFO விடுத்த மாபெரும் எச்சரிக்கை: கவனமாக இல்லையெனில் கடும் பாதிப்பு title=

EPFO Alert: நீங்கள் இபிஎஃப்ஓ சந்தாதாரராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிக முக்கியமான செய்தியாகும். இபிஎஃப்ஓ சந்தாதாரர்களுக்கு, பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஒரு எச்சரிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஒருவர் அரசு ஊழியராகவோ அல்லது தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவராகவோ இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள் EPFO-ல் உறுப்பினராக இருந்தால், ஒவ்வொரு மாதமும் உங்கள் பிஎஃப் கழிக்கப்படுகிறது. 

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மூலம் பிஎஃப் பிடித்தம் செய்யப்படும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இபிஎஃப்ஓ-வின் பெயரில் பல மோசடிகள் வெளி வந்ததை அடுத்து, கடந்த சில நாட்களாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

EPFO தனிப்பட்ட தகவல்களைக் கேட்பதில்லை

இதற்கு முன்னரும் இதுபோன்ற எச்சரிக்கை செய்திகள் EPFO மூலம் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் கடந்த சில நாட்களில் மோசடி வழக்குகள் வேகமாக அதிகரித்துள்ளன. தொலைபேசி, சமூக ஊடகங்கள், வாட்ஸ்அப் போன்றவற்றின் மூலம் இபிஎஃப்ஓ உறுப்பினர்களிடமிருந்து பான், ஆதார், யுஏஎன், வங்கிக் கணக்கு மற்றும் ஓடிபி போன்ற தனிப்பட்ட தகவல்களை இபிஎஃப்ஓ ​​ஒருபோதும் கேட்பதில்லை என்று இபிஎஃப்ஓ ​​சார்பாக ட்வீட் செய்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | இந்த திட்டத்தில் 6.7% வட்டி பெறலாம், துளி கூட ரிஸ்க் கிடையாது 

அழைப்புகள் / வாட்ஸ்அப் அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம்

சமூக ஊடகங்கள், வாட்ஸ்அப் போன்றவற்றின் மூலம் எந்தவொரு சேவைக்கும் அல்லது வேறு எதற்கும் எந்த விதமான பணத்தையும் டெபாசிட் செய்ய EPFO ​​கேட்காது என்று EPFO ​​எச்சரித்துள்ளது. ஆகையால், இபிஎஃப்ஓ உறுப்பினர்களும் அத்தகைய அழைப்பு அல்லது வாட்ஸ்அப் அழைப்புக்கு பதிலளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முதலாளியின் பங்கு இரண்டு பகுதிகளாக டெபாசிட் செய்யப்படுகிறது

இபிஎஃப்ஓ உறுப்பினர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதவீதம் இபிஎஃப்ஓ ​​கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. அதேபோல், அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதத்தை முதலாளி வழங்க வேண்டும். இந்த 12 சதவீதத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன. 12 சதவீதத்தில், முதல் பகுதியான 8.33 சதவீதம் ஊழியர் ஓய்வூதியக் கணக்கிற்கும் (இபிஎஸ்) மீதமுள்ள 3.67 சதவீதத் தொகை இபிஎஃப் கணக்கிற்கும் செல்கிறது. பணி ஓய்வு பெறும்போது இந்தத் தொகையைப் பெறுவதற்கான விதிமுறை உள்ளது. ஆனால் பணி ஓய்வுக்கு முன்னரும், தேவைப்பட்டால் இந்த தொகையை எடுத்துக்கொள்ளலாம். 

மேலும் படிக்க | வங்கி கணக்குடன் ஆதாரை இணைப்பது எப்படி? எந்த ஆவணங்கள் தேவை 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News