இபிஎஃப்ஓ சந்தாதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) கீழ் ஊதிய உச்சவரம்பை அதிகரிக்க உயர்மட்டக் குழு முன்மொழிந்துள்ளது. இந்த வரம்பை தற்போதுள்ள ரூ.15,000ல் இருந்து மாதம் ரூ.21,000 ஆக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் ஊழியர்களின் ஊதிய சம்பள வரம்பை அதிகரிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஊதிய வரம்பை மாதம் ஒன்றுக்கு 21,000 ரூபாயாக உயர்த்த முன்மொழியப்பட்ட குழுவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆலோசிக்கப்பட்ட பிறகு இந்த உயர்வை அரசு பிற்காலத்தில் அமல்படுத்தக்கூடும் என்று குழு கூறியுள்ளது.
இதற்கு முன்னர் கடந்த 2014-ம் ஆண்டு இதில் திருத்தம் செய்யப்பட்டது. ஆகையால், இபிஎஃப்ஓ உறுப்பினர்கள் இந்த உயர்வுக்கு ஆதரவாக உள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில், இந்த உயர்வை இபிஎஃப்ஓவின் மத்திய அறங்காவலர் குழு ஏற்றுக்கொண்டால், லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு பெரிய நிவாரணம் கிடைக்கும்.
மேலும் படிக்க | EPFO ஊழியர்களுக்கு கிடைக்கப்போகும் 1 லட்சம் ரூபாய்! முழு தகவல்!
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டவுடன், 7.5 மில்லியன் கூடுதல் தொழிலாளர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக ஒரு ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, மத்திய அரசு, ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு சுமார் 6,750 கோடி ரூபாய் செலுத்துகிறது.
முன்னதாக, ஓய்வூதிய நிதி மீதான அழுத்தத்தைக் குறைக்க ஓய்வூதிய வயதை உயர்த்துவதை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) ஆதரிப்பதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்தன. ஏனெனில் 2047 ஆம் ஆண்டில், இந்தியா ஒரு வயதாகும் சமூகமாக (ஏஜிங் சொசைடி) உருவெடுக்கும். ஏனெனில், சுமார் 140 மில்லியன் மக்கள் 60 வயதுக்கு மேலான வயதுடையவர்களாக இருப்பார்கள்.
இபிஎஃப்ஓ அதன் விஷன் 2047 ஆவணத்தில், "ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது, மற்ற நாடுகளின் அனுபவத்திற்கு ஏற்ப பரிசீலிக்கப்படலாம் மற்றும் ஓய்வூதிய முறைகளின் நம்பகத்தன்மைக்கு இது முக்கியமாக இருக்கும்" என்று கூறியுள்ளது.
2031 இல் இந்திய மக்கள் தொகையில் 93 மில்லியன் ஆண்களும் 101 மில்லியன் பெண்களும் இருப்பார்கள். இந்த அளவு 2021 இல் 67 மில்லியன் ஆண்கள் மற்றும் 71 மில்லியன் பெண்களாக இருந்தது. "அதனால்தான் முதியோர் வருமானம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு தேவைப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிவேகமாக உயரும்" என்று இபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | EPFO E Nomination செய்யவில்லை என்றால் உங்களுக்குதான் நஷ்டம்: செயல்முறை இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ