EPFO Update: மாதா மாதம் இபிஎஃப் -இல் ஒரு குறிப்பிட்ட தொகையை பங்களிக்கும் நபரா நீங்கள்? அப்படி என்றால் உங்களுக்கு ஒரு அட்டகாசமான செய்தி வந்துள்ளது. கூடிய விரைவில் உங்கள் கணக்கில் ஒரு பெரிய தொகை வரவுள்ளது. இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
பிஎஃப் வட்டித்தொகை
பிஎஃப் உறுப்பினர்களுக்கு வட்டித் தொகை (EPF Interest) வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இது ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய பரிசாக அமையும். பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வால் அவதியில் உள்ள மக்களுக்கு இந்த தொகை ஒரு பெரிய நிவாரணமாக அமையும். அதுவும் பண்டிகை காலத்தில் செலவுகள் இன்னும் அதிகரிக்கும் என்பதால், இந்த காலத்தில் வரும் கூடுதல் தொகை ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகின்றது.
சில மாதங்களுக்கு முன்பு, மோடி அரசாங்கம் 2022-2023 நிதியாண்டிற்கு 8.15 சதவீத வட்டி வழங்கப்படும் என்ற ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டது. அதிலிருந்து வட்டி பணம் எப்போது கணக்கில் வரவு வைக்கப்படும் என பிஃப் சந்தாதாரர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இந்தத் தொகை கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவு அதிக வட்டித்தொகையாகும். இதற்கு முந்தைய நிதியாண்டில் 8.1 சதவீத வட்டி அளிக்கப்பட்டது.
அனைத்து பிஎஃப் உறுப்பினர்களின் கணக்கிலும் வட்டித் தொகை எப்போது வரவு வைக்கப்படும் என்பது பற்றி அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை. எனினும் மிக விரைவில் இது நடக்கும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பிஎஃப் கணக்கில் எவ்வளவு தொகை வரும்
பிஎஃப் ஊழியர்களின் இபிஎஃப் (EPF) கணக்கில் மத்திய அரசு 8.15 சதவீத வட்டிக்கான தொகையை டெபாசிட் செய்யும். இது சந்தாதாரர்களின் கணக்கில் இருக்கும் தொகைக்கு ஏற்ப மாறுபடும். உதாரணமாக, ஒருவரது கணக்கில் ரூ.5 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தால், 8.15 சதவீத வட்டியில் அவருக்கு சுமார் ரூ.41,000 கிடைக்கும். ஊழியரின் பிஎஃப் கணக்கில் ரூ.6 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தால், சுமார் ரூ.50 ஆயிரம் வட்டியாக டெபாசிட் செய்யப்படும். ஊழியரின் கணக்கில் ரூ.7 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தால், அவருக்கு சுமார் ரூ.57 ஆயிரம் வட்டியாக டெபாசிட் செய்யப்படும்.
மேலும் படிக்க | கோடீஸ்வரனாகும் எளிய வழி... ‘இந்த’ 5 விதிகளை கடைபிடிக்கவும்...!
கணக்கில் தொகை வந்துவிட்டதா என்பதை எப்படி செக் செய்வது?
பிஎஃப் ஊழியர்களின் கணக்கில் எவ்வளவு பணம் (EPF Balance) வந்துள்ளது என்பதை செக் செய்ய எங்கும் அலைய தேவை இல்லை. வீட்டில் இருந்தபடியே இதை செய்யலாம். இதற்கு பல வழிகள் உள்ளன.
- உங்கள் மொபைல் போனில், பிளே ஸ்டோரிலிருந்து உமங் செயலியைப் பதிவிறக்கம் செய்து, அதிலிருந்து பிஎஃப் தொகையை செக் செய்யலாம்.
- இபிஎஃப்ஓ (EPFO) -இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்றும் வட்டித் தொகையை எளிதாகச் சரிபார்க்கலாம்.
- மிஸ்டு கால் மூலம் பிஎஃப் இருப்பை அறிய, கணக்கு வைத்திருப்பவரின் மொபைல் எண்ணை இபிஎஃப்ஓ -வில் பதிவு செய்ய வேண்டும். பிஎஃப் சந்தாதாரர் மிஸ்டு கால் மூலம் இருப்புத் தகவலைப் பெற பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து, உங்கள் மொபைலுக்கு எஸ்எம்எஸ் மூலம் கணக்குத் தகவல் வரும்.
- எஸ்எம்எஸ் மூலம் பிஎஃப் இருப்பை அறிய, இபிஎஃப்ஓ -இல் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு SMS செய்யவும். இதற்கு, EPFO UAN LAN என்று டைப் செய்ய வேண்டும். இங்கு LAN என்றால் மொழி என்று பொருள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ