EPF சந்தாதாரர்களுக்கு ரூ. 50,000 போனஸ்: இதை உடனே செய்து விடுங்கள்!!

EPFO Update: நீங்களும் இபிஎஃப் -இல் முதலீடு செய்யும் நபராக இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். EPFO, இபிஎஃப் கணக்கு வைத்திருக்கும் நபர்களுக்காக பல நன்மைகளை அளிக்கின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 19, 2024, 09:05 AM IST
  • கூடுதல் போனஸ் யாருக்கு கிடைக்கும்?
  • இந்த பணியாளர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
  • நாமினேஷன் செய்வது அவசியம்.
EPF சந்தாதாரர்களுக்கு ரூ. 50,000 போனஸ்: இதை உடனே செய்து விடுங்கள்!! title=

EPFO Update: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளை நிர்வகிக்கின்றது. பணியாளர்கள் தங்கள் மாத சம்பளத்தில் ஒரு தொகையை பிஎஃப் கணக்கில் டெபசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கின்றது. இபிஎஃப் தொகை ஊழியர்கள் பணி ஓய்வுக்கு பிறகான காலத்தில் உதவும் ஒரு மிகப்பெரிய சேமிப்பாக பார்க்கப்படுகின்றது. இபிஎஃப் கணக்குகள் தொடர்பான பல புதுப்பிப்புகள் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன. இவற்றை இபிஎஃப் உறுப்பினர்கள் அப்டேட் செய்து வைத்துக்கொள்வது நல்லது. 

இபிஎஃப்ஓ அவ்வப்போது பிஎஃப் சந்தாதாரர்களின் (EPF Subscribers) வசதிக்காக இபிஎஃப் விதிகளில் மாற்றங்களை செய்கிறது, புதுப்பித்தல்களை கொடுக்கிறது. இபிஎஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் EPFO ஆல் வகுக்கப்பட்டுள்ள சில விதிகளை பின்பற்ற வேண்டும். 

நீங்களும் இபிஎஃப் -இல் முதலீடு செய்யும் நபராக இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். EPFO, இபிஎஃப் கணக்கு (EPF Account) வைத்திருக்கும் நபர்களுக்காக பல நன்மைகளை அளிக்கின்றது. எனினும், இந்த அனைத்து வசதிகளைப் பற்றியும் அனைத்து இபிஎஃப் உறுப்பினர்களுக்கும் (EPF Members) தெரிவதில்லை.

இபிஎஃப் கணக்கின் மூலம் இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு (EPF Subscribers) காப்பீட்டைத் தவிர இன்னும் பல வசதிகளும் கிடைக்கின்றன. சந்தாதாரர்கள் கூடுதல் போனஸ் போன்ற வசதிகளையும் பெறுகிறார்கள். எனினும், அதற்கு சில முக்கியமான நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். மேலும், நிபந்தனைகளுக்கு ஏற்ப போனஸ் தொகை அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். 

கூடுதல் போனஸ் யாருக்கு கிடைக்கும்?

இந்த கூடுதல் போனஸ் லாயல்டி கம் லைஃப் பெனிஃபிட்டின் அடிப்படையில் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த கூடுதல் போனஸ் தொகையை பெற, பணியாளர்கள் குறைந்தபட்சம் இருபது வருடங்களுக்கு இபிஎஃப் பங்களிப்பு செய்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மட்டுமே இதற்கு தகுதியானவர்களாகக் கருதப்படுகிறார்கள். மேலும், கூடுதல் போனஸ் அந்தந்த பணியாளர்களின் சம்பளத்திற்கு ஏற்ப தீர்மானிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை அடிப்படை சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு ரூ.40,000 வரை கூடுதல் போனஸ் கிடைக்கும். மேலும் அடிப்படை சம்பளம் ரூ.10 ஆயிரத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.50 ஆயிரம் கூடுதல் போனஸ் கிடைக்கும்.

மேலும் படிக்க | உங்கள் PF கணக்கில் இருந்து ஒரே நேரத்தில் எவ்வளவு பணம் வரை எடுக்க முடியும்?

இந்த பணியாளர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது

பிஎஃப் சந்தாதாரர் 20 வயதுக்கு முன் ஊனமுற்றால், அவருக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. அத்தகைய ஊழியர்களுக்கு ஓய்வு பெறும்போது கூடுதல் போனஸ் வழங்கப்படுகிறது. இருப்பினும், கூடுதல் போனஸ் தொகையை நிர்ணயம் செய்வதற்கான விதிகள் அப்படியே இருக்கும். அதாவது அவர்களின் போனஸ் அடிப்படை சம்பளத்தை பொருத்து தீர்மானிக்கப்படுகிறது. 

நாமினேஷன் செய்வது அவசியம்

இந்த கூடுதல் போனஸ் (Additional Bonus) வசதிக்கு தகுதி பெற்றிருக்கும் பிஎஃப் உறுப்பினர்கள், தாமதமின்றி கூடுதல் போனஸுக்கு விண்ணப்பிக்கலாம். தங்கள் கணக்கில் நாமினேஷன் (PF Nomination) செய்யாத பணியாளர்களும் இந்த வசதியை இழக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால், இதுவரை இ-நாமினேஷன் செய்யாத ஊழியர்கள் உடனடியாக இதை செய்ய வேண்டும். இல்லையென்றால், இந்த வசதி உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். 

மேலும் படிக்க | உங்கள் சிறுதாெழிலில் இருந்து அதிக வருமானம் பார்க்கலாம்! ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News