இணையத்தில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது, 2016ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் திடீர் அறிவிப்பை அடுத்து நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட 1000 ரூபாய் தாள் வரும் 2023 புத்தாண்டின் முதல் நாளான ஜனவரி 1இல் இருந்து புழக்கத்திற்கு வர உள்ளதாக அந்த வீடியோவில் குறிப்பிடப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் தற்போது இருக்கும் 2000 ரூபாய் நோட்டை முழுமையாக தடை செய்துவிட்டு, பழையபடி 1000 ரூபாய் நோட்டை அரசு புழக்கத்தில் விட திட்டமிட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்படுகிறது. சமீபத்தில், 2018-19 ஆண்டுக்கு பின், 2000 ரூபாய் நோட்டை அச்சடிக்கவில்லை என மத்திய அரசு கூறிய நிலையில், இந்த வீடியோவானது அதிக மக்களை சென்றடைந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் படிக்க | 500 ரூபாய் நோட்டு குறித்து அரசு வெளியிட்ட முக்கிய தகவல்
இந்த வீடியோ எந்தளவிற்கு உண்மைத்தன்மை வாய்ந்தது என ஆய்வு செய்ததில், இது முற்றிலும் போலியான செய்தி அடங்கிய வீடியோ என தெரியவந்தது. இதுதொடர்பாக, பிஐபி ஃபேக்ட் செக் (உண்மை கண்டறியும் பிரிவு) வெளியிட்ட ட்வீட்டில்,"வரும் ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வரும் என்றும், 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் வங்கிகளால் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது என்ற தகவல்களுடன் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இந்த செய்தி முற்றிலும் தவறானது. தவறான செய்தியை கொண்ட இந்த வீடியோவை யாரும் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம்" என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
सोशल मीडिया पर वायरल वीडियों में दावा किया जा रहा कि जनवरी से हजार का नया नोट आने वाले हैं और 2 हजार के नोट बैंकों में वापस लौट जाएंगे। #PIBFactCheck
ये दावा फर्जी है।
कृपया ऐसे भ्रामक मैसेज फॉरवर्ड ना करें। pic.twitter.com/rBdY2ZpmM4
— PIB Fact Check (@PIBFactCheck) December 16, 2022
2019-2020, 2020-2021, 2021-2022 ஆகிய நிதியாண்டுகளில் ஒரு 2000 ரூபாயை நோட்டுகள் கூட அச்சடிக்கப்படவில்லை என தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.
கள்ள நோட்டுகள் ஒழிப்பு, கருப்பு பணம் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி 2016ஆம் ஆண்டு, பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டன. தொடர்ந்து, புதிய 500 ரூபாய் நோட்டுகள், 1000 ரூபாய் நோட்டுகள் இந்திய ரிசர்வ் வங்கியால் அச்சடிக்கப்பட்டன.
ஆனால், முன்பை விட கள்ள நோட்டு புழக்கம் என்பது அதிகரித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி கூறியிருந்தது. தேசிய குற்ற ஆவண காப்பக்கத்தின் தரவுகளின்படி, 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்ட 2016ஆம் ஆண்டில் 2, 272 கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்ட நிலையில், 2020ஆம் ஆண்டில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 834 கள்ள நோட்டுகள் கைப்பற்றுள்ளது. இதன்மூலம், கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | 'இதெல்லாம் பொய்யா?' சிபில் ஸ்கோரை சுற்றியிருக்கும் கட்டுக்கதைகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ