தங்கம் விலை ஏறிக் கொண்டே செல்கிறது. ஒரு பவுன் தங்கம் 59 ஆயிரத்தை தொட்டுவிட்ட நிலையில், டிசம்பர் இறுதிக்குள் 60 ஆயிரத்தை கடந்துவிடும் என மார்க்கெட் நிலவரம் கூறுகிறது. நகை வியாபாரிகள் தங்கம் விலை ஏற்றம் குறித்து பேசும்போது, உலக பொருளாதார சூழலை கவனிக்கும்போது தங்கம் விலை இனி குறைய வாய்ப்பே இல்லை என தெரிவித்துள்ளனர். இன்னும் ஓராண்டுக்குள் தங்கம் விலை ஒரு லட்சம் ரூபாயை கடந்தாலும் ஆச்சரியப்படுதற்கில்லை என தெரிவித்துள்ளனர். தங்கம் விலை ஏன் அதிகரிக்கிறது, இதற்கான காரணம் என்ன என்று கேட்டால் மிக முக்கியமான விஷயத்தை தங்க நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.
தங்கம் வாங்குவதை அமெரிக்கா, சீனா இதுவரை இல்லாத ஆர்வம் காட்டி வருவதாக தெரிவித்துள்ளனர். அந்த நாட்டைச் சேர்ந்த நிறுவனங்களும் தங்கம் மீதான முதலீடுகளை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளன என்றும் தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். எதிர்கால பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளாக இருக்கும் அமெரிக்கா, சீனா தங்கம் மீதான முதலீட்டை அதிகரித்திருப்பது, மற்ற நாடுகளையும் உற்று நோக்க வைத்திருக்கிறது. இதனால் மார்கெட்டில் தங்கம் மீதான டிமாண்ட் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. இதனையொட்டியே இந்தியாவில் தங்கம் விலை உயர தொடங்கியுள்ளது. அமெரிக்கா, சீனா ஆகியவை தங்கம் இருப்பை அதிகப்படுத்தியுள்ளதை கருத்தில் கொண்டு இந்தியாவிலும் தங்கம் மீதான முதலீடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
மேலும் படிக்க | மக்களே முக்கிய தகவல்! தங்கம் விலை ஒரு லட்சத்தை எட்டப்போகுது....!
இது இந்தியாவில் இருக்கும் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பவுன் நகை வாங்குவது வாழ்நாள் கனவாக அவர்களுக்கு மாறிக் கொண்டிருக்கிறது. முன்னணி பொருளாதார வல்லுநர்களும் இதை குறிப்பிட்டு கூறுகின்றனர். அதேநேரத்தில் பொருளாதார சிக்கல் காரணமாக நடுத்தர மக்கள் இடையே வாங்கி வைத்திருக்கும் தங்கத்தை விற்கலாமா என்ற யோசனை அதிகரித்துள்ளது. அப்படி பழைய தங்கத்தை விற்பனை செய்யும்போது என்னென்ன வரிகள் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
ஒருவேளை நீங்கள் உங்களிடம் இருக்கும் பழைய தங்கத்தை விற்பனை செய்து புதிய நகை வாங்குகிறீர்கள் என்றாலும், அதன் மீதான மூலதன ஆதாய வரியை நீங்கள் செலுத்த வேண்டும். ஒரு புதிய ஆபரணத்தை வாங்கும் நோக்கத்திற்காக கூட தங்கத்தின் விற்பனை பழைய சொத்தின் விற்பனையாகவே பார்க்கப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். 2024 பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மூலதன ஆதாயங்கள் தொடர்பான விதிகளை திருத்தினார். அதன்படி, புதிய விதிகளின் கீழ், எந்தவொரு நிதியல்லாத சொத்துக்கும், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வாங்கிய பிறகு விற்கப்படும் போது 12.5 சதவிகிதம் மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்குள் அந்த நகை விற்பனை செய்யப்பட்டால், அது குறுகிய கால மூலதன ஆதாயமாகக் கருதப்பட்டு, மொத்த வருமானத்துடன் ஸ்லாப் விகிதத்தில் வரி விதிக்கப்படும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் வாங்கிய தங்கத்தை விற்று, ₹50,000 மூலதன லாபத்தைப் பெற்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதன் மீதான உங்கள் வரிப் பொறுப்பு ₹6,250 (12.5 X 50,000/100). நீங்கள் அதன் மீது 4 சதவீத செஸ் (₹250) செலுத்த வேண்டும், இதனால் அது ₹6,500 ஆகும். அதாவது, பழைய நகைகளை புதியதாக மாற்றினால், அது பழைய நகைகளின் விற்பனையாகக் கருதப்பட்டு அதற்கு வருமான வரி செலுத்த வேண்டும்.
மேலும், நீங்கள் புதிய நகைகளை வாங்கும்போது, அல்லது தற்போதுள்ள நகைகளை விற்பனை செய்தாலும், செய்யா விட்டாலும் அதற்கு 3 சதவீத ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். அதனால், டிஜிட்டல் தங்கம் வாங்கும் போக்கு இப்போது அதிகரித்திருக்கிறது, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத் ஆகிய மூன்று நகரங்களில் அதிகம் டிஜிட்டல் தங்கம் வாங்கப்படுகிறது. டிஜிட்டல் 3 சதவீத ஜிஎஸ்டி இல்லை. 10-15 விழுக்காடு வரையிலான மேக்கிங் கட்டணமும் இல்லை.
மேலும் படிக்க | புதிய உச்சம் தொட்ட தங்கத்தின் விலை! ரூ.59,000ஐ நெருங்கியது ஒரு பவுன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ