இவர்களுக்கு அடித்தது லாட்டரி... ராக்கெட் வேகத்தில் ஏறும் முதலீடு!

LIC Share Price: எல்ஐசி நிறுவனம் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டிருந்த நிலையில், இன்று அதன் பங்குகள் 6 சதவீதம் உயர்ந்துள்ளது. இதுகுறித்த முழுவிவரத்தை இங்கே காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Aug 11, 2023, 04:52 PM IST
  • எல்ஐசியின் லாபம் 14 மடங்கு அதிகரித்துள்ளது.
  • எல்ஐசி பங்கின் விலை 679 என்ற அளவை எட்டியுள்ளது.
  • கடந்த மே 9ஆம் தேதி எல்ஐசி பங்கின் விலை 557 ஆக இருந்தது.
இவர்களுக்கு அடித்தது லாட்டரி... ராக்கெட் வேகத்தில் ஏறும் முதலீடு! title=

LIC Share Price: உங்களிடம் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) பங்கு இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. அந்த நிறுவனம் தனது காலாண்டு முடிவுகளை நேற்று (ஆக. 10) வெளியிட்டது. இம்முறை எல்ஐசியின் லாபம் 14 மடங்கு அதிகரித்துள்ளது. இதையடுத்து முதலீட்டாளர்களுக்கும் பெரும் லாட்டரி கிடைத்துள்ளது. இன்றைக்கு நிறுவனப் பங்குகளை வாங்க கடும் போட்டாப்போட்டி உள்ளது. எல்ஐசியின் பங்கு இன்று 6 சதவீதம் உயர்ந்து 679.95 என்ற நிலையை எட்டியுள்ளது.

பங்குகள் உயர்ந்தன

முதல் காலாண்டில் எல்ஐசி நிறுவனம் அதிக லாபம் ஈட்டியதன் காரணமாக எல்ஐசியின் பங்குகள் உயர்ந்துள்ளன. இன்று அந்நிறுவனத்தின் பங்குகளில் நல்ல கொள்முதல் உள்ளது. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பன்மடங்கு அதிகரித்து ரூ.9,544 கோடியாக அதிகரித்துள்ளது.

எல்ஐசியின் வருமானம் எவ்வளவு?

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, கடந்த நிதியாண்டின் (2022-23) இதே காலாண்டில் ரூ.683 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.1,68,881 கோடியாக இருந்த நிறுவனத்தின் மொத்த வருமானம் இந்த நிதியாண்டின் (2023-24) ஜூன் காலாண்டில் ரூ.1,88,749 கோடியாக அதிகரித்துள்ளதாக எல்ஐசி பங்குச் சந்தையில் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | LIC: இந்த திட்டத்தில் 5.5 லட்சம் டெபாசிட் செய்தால்... உங்கள் வாழ்நாள் முழுவதும் கவலையே இல்லை!

எல்ஐசி நிறுவனத்தின் இந்த நிதியாண்டின் காலாண்டு முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த எல்ஐசியின் தலைவர் சித்தார்த்த மொஹந்தி, "கூட்டு நிறுவனங்களில் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கான நிறுவனத்தின் முயற்சிகள் அதன் முடிவுகளைக் வெளிக்காட்டத் தொடங்கியுள்ளன" என்றார்.

மேலும் கூறிய அவர்,"ஒட்டுமொத்த மற்றும் தனிப்பட்ட வணிகத்தின் சதவீதமாக எங்களின் இணை அல்லாத தயாரிப்பின் மூலம் இத்தகையை அதிகரிப்பை நாங்கள் அடைந்துள்ளோம். எங்கள் ஒட்டுமொத்த செலவு விகிதம் சிறப்பாக உள்ளது மற்றும் எங்கள் விளிம்புகள் YOY அடிப்படையில் நிலையானதாகவும் உள்ளது. அதே நேரத்தில், நாங்கள் நிறுவனத்தை பல்வகைப்படுத்துவதற்கான உத்திகளில் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்" என்று அவர் மேலும் கூறினார்.
 
பிரீமியம் குறைக்கப்பட்டதா?

2022ஆம் ஆண்டின் ஜூன் காலாண்டில் ரூ.7,429 கோடியாக இருந்த முதல் ஆண்டு பிரீமியம், இந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டில் ரூ.6,811 கோடியாக குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.50,258 கோடியாக இருந்த காப்பீட்டு நிறுவனம் ஜூன் காலாண்டில் ரூ.53,638 கோடி ஈட்டியுள்ளது.

21 சதவீதம் அதிகரிப்பு

கடந்த 3 மாதங்களில் எல்ஐசி பங்குகள் வேகம் பெற்றுள்ளன. கடந்த 3 மாதங்களில் இந்நிறுவனத்தின் பங்கு 21 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. கடந்த மே 9ஆம் தேதி இந்நிறுவனத்தின் பங்கு விலை 557 என்ற அளவில் இருந்தது. அதே நேரத்தில் ஆகஸ்ட் 11ஆம் தேதியான இன்று, இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 679 என்ற அளவை எட்டியுள்ளது.

(பொறுப்பு துறப்பு: இங்கே பங்குகளின் செயல்திறன் பற்றிய தகவல் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது, இது முதலீட்டு ஆலோசனை அல்ல. பங்குச் சந்தையில் முதலீடு செய்வது ஆபத்துக்கு உட்பட்டது மற்றும் முதலீடு செய்வதற்கு முன் உங்கள் நிதி ஆலோசகரை அணுகவும்.)

மேலும் படிக்க | LIC பம்பர் திட்டம்: ரூ. 25 லட்சம் லாபம் காணலாம்.. உத்தரவாதத்துடன் பல நன்மைகள்
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News