ஆகஸ்ட் மாதம் முடிந்து செப்டம்பர் மாதம் தொடங்கியுள்ளது. இம்முறை செப்டம்பர் மாதம் பல பெரிய மாற்றங்களுடன் துவங்குகிறது. செப்டம்பரில் ஏற்படும் இந்த மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். சில மாற்றங்களால் உங்களுக்கு பலன் கிடைக்கும், சிலவற்றுக்கு ஆகும் செலவு இன்னும் அதிகரிக்கும். செப்டம்பர் 1 முதல் ஏற்படவுள்ள அப்படிப்பட்ட பெரிய மாற்றங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
வணிக எரிவாயு சிலிண்டர்
வணிக எரிவாயு சிலிண்டரின் விலை செப்டம்பர் 1 முதல் ரூ.91.5 குறைக்கப்பட்டுள்ளது. தற்போது டெல்லியில் இதன் விலை ரூ.1885 ஆக குறைந்துள்ளது. முன்னதாக இந்த சிலிண்டரின் விலை ரூ.1976.50 ஆக இருந்தது. சென்னையில் ரூ. 2,141 ஆக இருந்த விலை தற்போது ரூ. 2,045 ஆக குறைந்துள்ளது. வர்த்தக சிலிண்டர்களின் விலை தொடர்ந்து ஐந்தாவது முறையாக குறைந்துள்ளது. மே மாதத்தில் சிலிண்டர் விலை 2354 ரூபாய் என்ற சாதனை அளவை எட்டியது.
சர்கிள் ரேட்டில் ஏற்றம்
வீடு வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் இனி அதற்காக அதிகம் செலவிட வேண்டும். காசியாபாத் நிலத்தின் வட்ட விகிதம் (சர்கிள் ரேட்) செப்டம்பர் 1 முதல் அதிகரித்துள்ளது. வரும் காலங்களில், இந்தியாவின் மற்ற நகரங்களின் வட்ட விகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட்ட விகிதம் 2 முதல் 4 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிரீமியம் குறையும்
உங்கள் காப்பீட்டு பாலிசியின் பிரீமியம் செப்டம்பர் 1 முதல் குறைக்கப்படும். பொது காப்பீட்டு விதிகளில் ஐஆர்டிஏ செய்த மாற்றங்களுக்குப் பிறகு, வாடிக்கையாளர்கள் இப்போது முகவருக்கு 30 முதல் 35 சதவீத கமிஷனுக்கு பதிலாக 20 சதவீதம் மட்டுமே செலுத்த வேண்டும். இது பிரீமியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க | ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு - ஏதேனும் ஒரு டிகிரி அவசியம்
கேஒய்சி அப்டேட்
பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களுக்கான கேஒய்சி அப்டேட் செய்வதற்கான தேதி ஆகஸ்ட் 31 ஆகும். உங்கள் KYC ஐ நீங்கள் இன்னும் புதுப்பிக்கவில்லை என்றால், உங்கள் கணக்கு பிளாக் செய்யப்படலாம். அதாவது, கணக்கை இயக்குவதில் சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
பிஓபி கமிஷன்
செப்டம்பர் 1 முதல் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் கணக்கு தொடங்குவதற்கு பாயின்ட் ஆஃப் பிரசன்ஸ்-க்கு கமிஷன் வழங்கப்படும். என்பிஎஸ்- இல் முதலீட்டாளர்களுக்கு PoP மூலம் மட்டுமே பதிவு மற்றும் இதர வசதிகள் செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இன்று முதல் பிஓபிக்கு ரூ.10 முதல் ரூ.15 ஆயிரம் வரை கமிஷன் வழங்கப்படும்.
கிசான் சம்மான் நிதி திட்டம்
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் கெஒய்சி-ஐப் நிறைவு செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 31 ஆகும். அரசாங்கத்தால் மீண்டும் மீண்டும் தேதி நீட்டிக்கப்பட்ட பிறகும் உங்களால் கெஒய்சி- ஐப் பெற முடியவில்லை என்றால், நீங்கள் 12வது தவணையின் பலனைப் பெறமாட்டீர்கள். கெஒய்சி முடிப்பவர்களின் கணக்குகளுக்கு மட்டுமே அரசாங்கம் பணத்தை பரிமாற்றம் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு சூப்பர் நியூஸ், இந்த தேதியில் அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ