காப்பீட்டு சேவைகளில் உள்ள குறைபாடுகள் குறித்த புகார்களை விரைவாகவும் திறம்படவும் தீர்க்க, மத்திய அரசு செவ்வாயன்று காப்பீட்டு கொள்கை விதிகளில் முக்கிய திருத்தத்தை அறிவித்தது.
புதிய விதிகள் காப்பீட்டு நிறுவனங்கள், முகவர்கள், தரகர்கள் மற்றும் பிற இடைத்தரகள் வழங்கும் சேவையில் குறைபாடுகள் தொடர்பான புகார்களை லோக்பால் இடம் கொண்டு செல்ல வகை செய்யும் வகையில், விதிகள் திருத்தப்பட்டுள்ளன.
புதிய விதிகளின் கீழ், காப்பீட்டு நிறுவனங்களின் நிர்வாகக் குழுவின் பொறுப்புகளை காப்பீட்டு நிறுவனம் கவுன்சில் ஏற்கும். புதிய விதி காப்பீட்டு முகவர்களை லோக்பாலின் கீழ் கொண்டுவந்துள்ளது.
கடந்த ஆண்
டு ஒரு நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்தது. நிறுவனங்களுக்கு எதிரான புகாரை விசாரிக்க தனி அதிகாரி நியமிக்கப்பட்டு, லோக்பால் விதிகளின் கீழ் புகார்கள் விசாரணை செய்யப்படும்.
பாலிசிதாரர்கள் இப்போது லோக்பாலில் டிஜிட்டல் முறையில் புகார்களை பதிவு செய்யலாம் மற்றும்
ஒரு குறை தீர்க்கும் முறைமை உருவாக்கப்படும், இதனால் அவர்கள் தங்கள் குறைகள் எந்த அளவிற்கு தீர்க்கப்பட்டுள்ளது என ஆன்லைனில் கண்காணிக்க முடியும். புகாரை தீர்க்க வசதியாக, புகாரை தீர்க்க நியமிக்கப்பட்டுள்ள அதிகாரி வீடியோ கான்பரன்சிங் வசதியை விசாரணைக்கு பயன்படுத்தலாம்.
லோக்பாலுக்கான தேர்வுக் குழுவில் இப்போது நுகர்வோர் உரிமைகளை மேம்படுத்துதல் அல்லது காப்பீட்டுத் துறையில் நுகர்வோர் பாதுகாப்பை உறுதிப்படுத்த இது தொடரான ட்ராக் ரெகார்ட் உள்ள உள்ள ஒரு நபர் சேர்க்கப்படுவார்.
இந்த அறிவிப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த மும்பையைச் சேர்ந்த காப்பீட்டு நிறுவனத் தலைவர் ஒருவர், முதன்முறையாக, புகார்களைச் சமர்ப்பிக்கவும் அவற்றைக் கண்காணிக்கவும் விசாரணை அதிகாரிக்க ஆன்லைன் மேலாண்மை முறையை வழங்குவது போன்ற குறிப்பிட்ட காப்பீடு புகார்களை விரைவில் தீர்க்கும் வகையிலான மாற்றங்களைக் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறினார்.
காப்பீடுதொடர்பான புகார்களை விசாரணை செய்வதற்கான விதிகள் 2017 ஐ மறுஆய்வு செய்ய நிதி அமைச்சின் கீழ் உள்ள நிதிச் சேவைத் துறை ஒரு குழுவை அமைத்தது.
பாலிசிதாரர்கள் அல்லது காப்பீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாக்க காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் சட்டம் 1999 இன் நோக்கங்களை பூர்த்தி செய்ய லோக்பால் விதிகள் போதுமானதாக இல்லை என்பதை நாடாளுமன்ற குழு கவனத்தில் கொண்டது.
நிதிச் சேவைத் துறையின் தற்போதைய விதிகளில் உள்ள குறைபாடுகளை ஒப்புக் கொண்டு, விதிகளை மறுஆய்வு செய்து, பாலிஸிதாரர்களின் புகார்களை விரைந்து தீர்க்கும் வகையில், தகுந்த திருத்தங்களைச் செய்ய பரிந்துரைக்கப்பட்டது.
ALSO READ | அலுவலகத்தில் பாஸ் உடன் மோதலா... இதோ உங்களுக்காக 4 முக்கிய டிப்ஸ்..!!!
தேசம், சர்வ்தேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR