பொதுத்துறை ஊழியர்களுக்கு இருப்பது போன்ற சமூகப் பாதுகாப்புப் பலன்கள் இல்லாத தனியார் துறை ஊழியர்களுக்கு ஆயுள் காப்பீட்டின் பலன்களை விரிவுபடுத்துவதற்காக, 1976 ஆம் ஆண்டில் பணியாளர்கள் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தை இந்திய அரசு (EDLI) அறிமுகப்படுத்தியது. பணியாளர்கள் இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தின் அம்சங்களைப் பற்றி பலருக்கு முழுமையாக தெரிவதில்லை. பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் அனைத்து பயனாளிகளும் இந்த ஆயுள் காப்பீட்டின் பயனைப் பெறலாம்.
ஊழியர்களின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தில் (Employees Deposit Linked Insurance Scheme (EDLI)) பலன்கள், பணியில் இருக்கும் பணியாளருக்கு மட்டுமே கிடைக்கும். பணியில் இருக்கும் போது பணியாளர் உயிரிழந்தால், EPFO உறுப்பினரின் நியமனதாரர் அல்லது சட்டப்பூர்வ வாரிசுக்கு அதிகபட்சமாக ரூபாய் 7 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
ஊழியர்களின் பங்களிப்பு
EDLI க்கு ஊழியர்கள் பங்களிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களின் பங்களிப்பு EPFக்கு மட்டுமே தேவைப்படுகிறது.20 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட எந்தவொரு நிறுவனமும் EPF க்கு பதிவு செய்ய வேண்டும். எனவே, EPF கணக்கு வைத்திருக்கும் எந்தவொரு பணியாளரும் தானாகவே EDLI திட்டத்தின் பலன்களைப் பெறத் தகுதி பெறுகிறார்.
மேலும் படிக்க | மத்திய அரசின் இலவச காப்பீடு... ஆயுஷ்மான் அட்டை பெற விண்ணப்பிக்கும் முறை!
EDLI வழங்கும் இந்த காப்பீட்டுத் திட்டத்திற்கு விதிவிலக்குகள் எதுவுமே இல்லை. வேலை பார்த்து சம்பாதிக்கும் பணியாளருக்கு ஏற்படும் திடீர் மரணம், அவருடைரு குடும்பத்திற்கு ஏற்படுத்தும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ள உதவுகிறது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர விதிகள் சட்டம் 1952 (EPF Act) கீழ் உள்ள நிறுவனங்களின் அனைத்து ஊழியர்களுக்கும் இந்தத் திட்டம் கிடைக்கும்.
இந்தத் திட்டத்தின் பயனைப் பெறுவது தொடர்பான பல சந்தேகங்கள் இருக்கின்றன. ஒரு ஊழியர் இறப்பதற்கு முன் கடந்த 12 மாதங்களில் பணியாளர் வேலை மாறினாலும், திட்டத்தின் பலன் கிடைக்குமா என்ற கேள்வி பலருக்கு உண்டு. அவசியம் பலன் கிடைக்கும். ஊழியர் காப்பீட்டுத் திட்டத்தின் பயனை இறந்த பணியாளரின் சட்டப்பூர்வ வாரிசு பெறலாம்.
நிறுவனங்கள் EFF சட்டத்தின் கீழ் இருந்தால், ஊழியர்கள் இயல்பாகவே EDLI திட்டத்தின் கீழ் வந்துவிடுவார்கள். ஆனால் அவர்கள் அதிக ஊதியம் பெறும் காப்பீட்டுத் திட்டத்தைப் பெற விரும்பினால், இந்த திட்டத்திலிருந்து விலகிக் கொள்ளலாம்.
நாமினி
பணியாளருக்கு மரணம் ஏற்பட்டால், அவரது ஊழியர் வைப்புத் திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட நாமினிக்கு காப்பீட்டுத் தொகை கிடைக்கும். நாமினி பதிவு செய்யப்படாத நிலையில், காப்பீட்டுத் தொகை சட்டப்பூர்வ வாரிசுக்கு வழங்கப்படும். சட்டப்பூர்வ வாரிசு அல்லது நாமினி, EDLI, PF மற்றும் இறந்த உறுப்பினரின் ஓய்வூதியப் பலன்கள் அனைத்தையும் ஒரே கூட்டுப் படிவத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி விண்ணப்ப படிவங்கள் தேவையில்லை.
மேலும் படிக்க | ஜியோ, ஏர்டெல் யூஸ் பண்றீங்களா? இனி தாறுமாறாக அதிகரிக்கப்போகுது ரீசார்ஜ் கட்டணம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ