Post office Scheme : 100 ரூபாய் போதும்... எளிதான முதலீட்டில் ரிஸ்க் இல்லாமல் சேமிக்கலாம் - சிறார்களுக்கும் சொல்லிக்கொடுங்கள்!

Post office Scheme : தபால் அலுவலக தொடர் வைப்பு தொகை திட்டத்தின் மூலம் குறைந்த முறையில், லட்சக்கணக்கில் சேமிப்பை பெறுவதற்கான நடைமுறைகளை இங்கு காணலாம்.   

Written by - Sudharsan G | Last Updated : Oct 27, 2022, 07:54 AM IST
  • தொடர் வைப்பு தொகை மீது கடனும் பெறலாம்.
  • 3 பேர் வரை இணைத்து கூட்டு கணக்கும் தொடங்கலாம்.
  • சிறார்களும் இந்த சேமிப்பு திட்டத்தில் சேரலாம்.
Post office Scheme : 100 ரூபாய் போதும்... எளிதான முதலீட்டில் ரிஸ்க் இல்லாமல் சேமிக்கலாம் - சிறார்களுக்கும் சொல்லிக்கொடுங்கள்! title=

குறைந்த தொகையை முதலீடு செய்வதன் மூலம் இலட்சக்கணக்கில் எளிதாக ஒரு சேமிப்பை உங்களால் உருவாக்க முடியும். அதற்கான சிறந்த வழிகளில், தபால் அலுவலக தொடர் வைப்புத் திட்டமும் ஒன்று. 100 ரூபாயில் இருந்து முதலீட்டை நீங்கள் இங்கு தொடங்கலாம். 5 ஆண்டுகளில் 2 லட்சத்திற்கும் அதிகமான கார்பஸ் தொகை இங்கு வழங்கப்படுகிறது. 

தபால் அலுவலகம்,  தொடர் வைப்புத்தொகைக்கு (RD) தற்போது 5.8 சதவீத வருடாந்திர வட்டி விகித கூட்டுத்தொகையை காலாண்டுக்கு வழங்குகிறது. ஒரு நாளைக்கு ரூ.100 முதலீடு செய்வதன் மூலம், 5 ஆண்டுகளில் முதிர்வுத் தொகையாக 2,10,000 ரூபாயை பெறலாம் என அதன் இணையதளத்தில் தகவல் இடம்பெற்றுள்ளது.

மேலும் படிக்க | Post Office Scheme: வேகமாக பணம் இரட்டிப்பாகும், ரிஸ்க் இல்லாத முதலீட்டு திட்டம்

நகர்ப்புறம் முதல் தொலைதூர கிராமங்கள் வரையிலான தபால் அலுவலகக் கிளையில் வைப்பு கணக்கை (Deposit Account) தொடங்கலாம். பயனாளி அதிகபட்சம் மூன்று நபர்களைக் கொண்ட ஒரு கூட்டுக் கணக்கை தொடங்கலாம். சிறார்களும் தங்களின் பாதுகாவலரின் கீழ் இந்த கணக்குகளைத் திறக்கலாம். அஞ்சல் அலுவலக தொடர் வைப்பு தொகையின் (RD) முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். சில கட்டுப்பாடுகளுக்குப் பின்பற்றி, ஒருவர் 3 ஆண்டுகளுக்குப் பிறகும் நிதியை பெற்றுக்கொள்ளலாம். 

தொடர் வைப்பு தொகையின் மீதான கடன் வசதியும் உள்ளது. விதிகளின்படி, 12 தவணைகளை டெபாசிட் செய்த பிறகு, 50 சதவீதம் வரை நீங்கள் கடனாக பெற்றுக்கொள்ளலாம். கடனை மொத்தமாகவோ அல்லது தவணையாகவோ திருப்பிச் செலுத்தலாம். கடனுக்கான வட்டி விகிதம் RD மீதான வட்டியை விட 2 சதவீதம் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | போஸ்ட் ஆபீஸில் வந்த புதிய வசதி; வாடிக்கையாளர்கள் செம ஹேப்பி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News