EPF Account: ஊழியர்கள் ஏதேனும் தங்களது தேவைக்காக திடீரென்று பணம் கிடைக்காத சூழலில் ஊழியர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து (இபிஎஃப்) பணத்தை திரும்பப் பெறலாம். இபிஎஃப் திட்டமானது குறிப்பாக சம்பளம் பெறும் ஊழியர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் இது ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்குகிறது. இபிஎஃப் திட்டத்தின் கீழ், பணியாளர் மற்றும் முதலாளி இருவரும் இபிஎஃப் கணக்கில் சமமான அளவில் பங்களிக்கின்றனர். ஒரு ஊழியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன், இதுவரை அவர் இபிஎஃப் திட்டத்தில் பங்களித்த தொகைக்கு வட்டியுடன் சேர்த்து பணம் வழங்கப்படுகிறது. இபிஎஃப் திட்டத்தை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) மேற்பார்வையிடுகிறது. இபிஎஃப்ஓ என்பது உலகளவில் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்பு நிறுவனங்களில் ஒன்றாகும், இது ஏராளமான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதோடு அவர்களுக்கு நிதி சம்மந்தமான உதவிகளையும் செய்து வருகிறது.
இபிஎஃப்ஓ-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, அதன் உறுப்பினர்களுக்கு சொந்தமான 24.77 கோடி கணக்குகளை (2019-20 ஆண்டு அறிக்கையின்படி) இது நிர்வகிக்கிறது. இபிஎஃப் திட்டத்தில் ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் அவர்களின் அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதத்தை பங்களிக்க வேண்டும், இதில் நிறுவனத்தின் பங்களிப்பும் பொருந்தும். இருபதுக்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் இபிஎஃப்ஓ-ல் பதிவு செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. வெரிஃபிகேஷன் செயல்முறை காரணமாக முன்னர் இபிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை திரும்ப பெறுவதில் சில சிரமங்களை ஊழியர்கள் எதிர்கொண்ட நிலையில், இனிமேல் இந்த செயல்முறை எளிதானதாகிவிட்டது. தேவைப்பட்டால், தனிநபர்கள் தங்கள் இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட நிதியில் 75 சதவீதம் வரை எடுக்கலாம், இருப்பினும் இதற்கு சில நிபந்தனைகள் உள்ளது. ஊழியர்களது ஆதார், யுஏஎன் உடன் இணைக்கப்பட்டிருந்தால், இபிஎஃப் கணக்கிலிருந்து ஆன்லைனில் பணம் எடுக்க முடியும். பணத்தை திரும்ப பெறுவதற்கு முன் உலகளாவிய கணக்கு எண் (யுஏஎன்) செயலில் உள்ளதா என்பதை உறுதிசெய்ய வேண்டும் மற்றும் வங்கிக் கணக்கு, ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
மேலும் படிக்க | PPF கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கு புதிய விதிகள் அமல்! முழு விவரம்!
இபிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான படிப்படியான வழிகள்:
1) இபிஎஃப்ஓ உறுப்பினர் e-SEWA-ன் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்திற்கு செல்ல வேண்டும், அதன்பின்னர் யூஏஎன் லாக் இன் விவரங்களைப் பயன்படுத்தி உங்கள் கணக்கில் லாக் இன் செய்யவேண்டும்.
2) ஆன்லைன் சேவைகள் பிரிவுக்குச் சென்று, வழங்கப்பட்ட பட்டியலில் இருந்து "உரிமைகோரல் (படிவம் 19, 31, 10C அல்லது 10D)" என்கிற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
3) உங்கள் வங்கிக் கணக்கு எண்ணை அளித்து, "வெரிஃபை" என்கிற ஆப்ஷனை கிளிக் செய்யவேண்டும்.
4) தொடர "ஆம்" என்பதைத் தேர்ந்தெடுத்து, "ஆன்லைன் உரிமைகோரலுக்குச் செல்லவும்" என்கிற பட்டனை கிளிக் செய்யவேண்டும்.
5) "நான் விண்ணப்பிக்க விரும்புகிறேன்" என்கிற டேப்பின் கீழ் கிடைக்கும் ஆப்ஷன்களில் இருந்து உங்களுக்குத் தேவையான குறிப்பிட்ட கோரிக்கையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
6) உங்கள் இபிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை திரும்பப் பெறுவதற்கு பிஎஃப் அட்வான்ஸ் (படிவம் 31) ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
7) பணத்தை திரும்பப் பெறுவதற்கான காரணம், விரும்பிய தொகை மற்றும் முகவரி போன்ற தகவல்களை வழங்கி, இறுதியாக உங்கள் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க | குறைந்த வட்டியில் கிடைக்கும் PPF மீதான கடன்! விண்ணப்பிக்கும் முறை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ